
டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் தனது கிளான்சா ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், முற்றிலும் புதிய கிளான்சா மாடலின் CNG வேரியண்ட் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. புதிய கிளான்சா CNG மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதே தகவலை சில விற்பனையாளர்களும் உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.
பெட்ரோல் மாடலை போன்றே புதிய கிளான்சா CNG மாடலிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் செயல்திறன் பற்றி தெளிவான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், பெட்ரோல் என்ஜினை விட CNG கிட் கொண்ட பெட்ரோல் என்ஜின் செயல்திறன் சற்றே குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய டொயோட்டா கிளான்சா CNG மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய கிளான்சா CNG மாடல் அதிக வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய கிளான்சா CNG மாடல் லிட்டருக்கு 25 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் டொயோட்டா அறிமுகம் செய்த கேம்ரி ஃபேஸ்லிஃப்ட் மாடல் லிட்டருக்கு 23.27 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் புதிய டொயோட்டா கிளான்சா மாடலின் விலை ரூ. 6.39 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.69 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய டொயோட்டா கிளான்சா CNG மாடலின் விலை அதன் பெட்ரோல் மாடலி விட ரூ. 75 ஆயிரம் வரை கூடுதலாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய கிளான்சா மாடலை மாருதி சுசுகி உருவாக்கிய கார் ஆகும். இந்த மாடல் 2022 மாருதி சுசுகி பலேனோ மாடலுடன் விற்Hனை செய்யப்பட்டு வருகிறது. கிளான்சா மாடலின் உற்பத்தியும் குஜராத் மாநிலத்தில் உள்ள மாருதி சுசுகி ஆலையிலேயே நடைபெற்று வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.