Tata Altroz DCT: டாடா அல்ட்ரோஸ் DCT வேரியண்டில் உள்ள கியர்பாக்ஸ் ஷிஃப்ட்-பை-வயர் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒருவழியாக தனது அல்ட்ரோஸ் DCT வேரியண்டை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய டாடா அல்ட்ரோஸ் DCT விலை ரூ. 8.10 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இரண்டு ஆண்டுகளுக்கு டாடா அல்ட்ரோஸ் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் டாடா அல்ட்ரோஸ் இனி DCT கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும். புதிய DCT கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் வழங்கப்பட்டு இருக்கிறது.
undefined
புதிய டாடா அல்ட்ரோஸ் DCT ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் இரண்டு டார்க் எடிஷன் மாடல்களும் அடங்கும். புதிய 6 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் உடன் 86 ஹெச்.பி. திறன் வழங்கும் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. புதிய டாடா அல்ட்ரோஸ் DCT மாடல் விலை அதன் மேனுவல் வேரியண்டை விடை ரூ. 1 லட்சத்து 7 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டாடா அல்ட்ரோஸ் DCT விலை விவரங்கள்:
டாடா அல்ட்ரோஸ் XM+ DCT விலை ரூ. 8.10 லட்சம்
டாடா அல்ட்ரோஸ் XT DCT விலை ரூ. 8.60 லட்சம்
டாடா அல்ட்ரோஸ் XT DCT டார்க் எடிஷன் விலை ரூ. 9.06 லட்சம்
டாடா அல்ட்ரோஸ் XZ DCT விலை ரூ. 9.10 லட்சம்
டாடா அல்ட்ரோஸ் XZ (O) DCT விலை ரூ. 9.22 லட்சம்
டாடா அல்ட்ரோஸ் XZ+ DCT விலை ரூ. 9.60 லட்சம்
டாடா அல்ட்ரோஸ் XZ+ DCT டார்க் எடிஷன் விலை ரூ. 9.90 லட்சம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய 6 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் NA பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 86 ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய டாடா அல்ட்ரோஸ் DCT வேரியண்ட் அதன் மேனுவல் வெர்ஷன்களை விட 20 கிலோ வரை எடை அதிகரித்து இருக்கிறது. ஹூண்டாய் i20 என் லைன் வேரியண்ட்களில் உள்ளதை போன்று பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்படவில்லை. எனினும், மேனுவல் மோட் மற்றும் கியர் லீவர் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய DCT கியர்பாக்ஸ் இந்திய வானிலை மற்றும் சாலைகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. டாடா அல்ட்ரோஸ் DCT வேரியண்டில் உள்ள கியர்பாக்ஸ் ஷிஃப்ட்-பை-வயர் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. டாடா அல்ட்ரோஸ் டீசல் வேரியண்ட்கள் தொடர்ந்து மேனுவல் கியர்பாக்ஸ் உடனேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்திய சந்தையில் புதிய டாடா அல்ட்ரோஸ் DCT மாடல் XM+, XT, XZ, XZ(O) மற்றும் XZ+ வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய DCT மாடல் அம்சங்கள் அதன் மேனுவல் வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.