பிடித்த டி.வி. மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அமேசான் பே ரிவார்டு பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும்.
அமேசான் இந்தியா வலைதளத்தில் ஃபேப் டி.வி. ஃபெஸ்ட் துவங்கி உள்ளது. இந்த சிறப்பு விற்பனை மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அமேசான் ஃபேப் டி.வி. ஃபெஸ்ட் சிறப்பு விற்பனையில் புதிய டி.வி. மாடல்களுக்கு அசத்தலான சலுகைகள், டீல்கள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துன் ஒன்பிளஸ், சியோமி, ரெட்மி மற்றும் சாம்சங் பிராண்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்களை தேர்வு செய்யும் போது ரூ. 1,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஸ்மார்ட் டி.வி. வாங்கும் போது ரூ. 1500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் பிடித்தமான டி.வி. மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அமேசான் பே ரிவார்டு பயன்படுத்தும் போது 10 சதவீதம் அதிகபட்சம் ரூ. 200 வரை தள்ளுபடி பெற முடியும்.
அமேசான் ஃபேப் டி.வி. ஃபெஸ்ட் சலுகை விவரங்கள்:
- அதிகம் விற்பனையாகும் டி.வி. மாடல்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு கொண்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்களுக்கு பணம் செலுத்தும் போது ரூ. 1500 வரை உடனடி தல்ளுபடி வழங்கப்படுகிறது.
- அமேசான் பே ரிவார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட டி.வி. மாடல்களுக்கு ரூ. 10 சதவீதம் அதிகபட்சம் ரூ. 200 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- எல்.ஜி. டி.வி. 32 இன்ச் முதல் 55 இன்ச் மாடல்கள் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என துவங்குகிறது.
- எல்.ஜி. நானோசெல் டி.வி. 4K அல்ட்ரா சீரிஸ் விலை ரூ. 45 ஆயிரத்து 999 என துவங்குகிறது.
- ஒன்பிளஸ் டி.வி. 32 இன்ச் முதல் 55 இன்ச் மாடல்கள் விலை ரூ. 16 ஆயிரத்து 499 என துவங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- ஒன்பிளஸ் டி.வி. யு சீரிஸ் மாடல்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- ஒன்பிளஸ் டி.வி. வை சீரிஸ் மாடல்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- ரெட்மி டி.வி. மாடல்களின் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என துவங்குகிறது.
- ரெட்மி டி.வி. X 4K சீரிஸ் மாடல்கள் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என துவங்குகிறது.
- சாம்சங் க்ரிஸ்டல் 4K ப்ரோ சீரிஸ் விலை ரூ. 37 ஆயிரத்து 990 என துவங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது பத்து சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
- சாம்சங் வொண்டர்டெரியன்மெண்ட் சீரிஸ் விலை ரூ. 16 ஆயிரத்து 990 என துவங்குகிறது.
- சோனி பிராவியா சீரிஸ் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என துவங்குகிறது.
- சோனி பிராவியா 4K அல்ட்ரா HD சீரிஸ் விலை ரூ. 74 ஆயிரத்து 990 என துவங்குகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.