
பிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டே சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கிய இந்த விற்பனை, செப்டம்பர் 30 வரை நடைபெறுகிறது. ஆடைகள், அழகுசாதனப் பொருட்கள் முதல் காலணிகள் வரை - அனைத்திற்கும் தள்ளுபடிகள் உள்ளன. அதேபோல், பண்டிகை காலத்தில் வீட்டை அலங்கரிப்பதற்கான அலங்காரப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் தள்ளுபடி உண்டு.
அக்டோபர் மாதம் வரவுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள்!
மேலும், தற்போது ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய மொபைலை மாற்ற விரும்பும் வாடிக்கையாளர்கள், இந்த சந்தரப்பத்தைப் பயன்படுத்தி, உங்கள் பழைய மொபைலை எக்ஸ்சேஞ்ச் செய்து, புத்தம் புதிய மொபைலை வாங்கலாம்.
விரைவான டெலிவரி, கவர்ச்சிகரமான விலைச் சலுகைகள் மற்றும் வங்கி பரிவர்த்தனை சலுகைகள் உள்ளன. எனவே, முடிந்த வரையில் Flipkart Big Billion Day-ஐ எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
ஆஃபர் என்ற பெயரில் ஆப்பு வைத்த Flipkart.. வாடிக்கையாளர்கள் பெரும் ஏமாற்றம்!
Flipkart தளத்தில் இந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை பயன்படுத்த, முதலில் உங்கள் மொபைலில் Flipkart செயலியைப் பதிவிறக்கவும். பின்பு அந்த செயலியில் உங்களுக்கு பிடித்த ஸ்மாரட்போனை பார்க்கவும். அதில் பல்வேறு வகை விவரங்களை பார்க்கலாம். இப்போது நீங்கள் விற்க விரும்பும் போன் தொடர்பான IMEI எண், ஃபோன் மாடல், பிராண்ட் போன்ற அனைத்து தகவல்களையும் உள்ளிடவும். அப்போதுதான் உங்கள் பழைய போனை விற்றால் எவ்வளவு கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.
உங்களுக்கு ஏற்ற விலை கிடைத்தால், நீங்கள் திருப்தி அடைந்தால் ஆர்டர் செய்யுங்கள். ஃபோன் புக்கிங் செய்த 48 மணி நேரத்திற்குள் Flipkart பணியாளர்கள் உங்கள் வீட்டிற்கு வருவார்கள். அவர்கள் சாதனத்தைச் சரிபார்த்து, இறுதி விலையைச் சொல்வார்கள். அப்போது வங்கிக் கணக்கில் பணம் வந்துவிடும். விலை பிடிக்கவில்லை என்றால் கடைசி நிமிடத்தில் கூட உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.