Flipkart ஆஃபர் மோசடி! 80 ஆயிரம் ரூபாய் செலுத்தி ட்ரோன் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி!!

By Dinesh TG  |  First Published Sep 28, 2022, 2:10 PM IST

காஞ்சிபுரம் அருகே பிளிப்கார்ட் மூலம் 80 ஆயிரம் ரூபாய் செலுத்தி ட்ரோன் கேமராவை ஆர்டர் செய்தவருக்கு,  100 ரூபாய் பொம்மை கார் அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உலக அளவில் ஆன்லைன் விற்பனையில் முன்னனி நிறுவனமாக பிளிப்கார்ட் உள்ளது. தற்போது  ஃப்ளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் சேல்ஸ் என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடிவிற்பனை நடந்து வருகிறது. இதில் ஐ ஃபோன்களுக்கு பிளிப்கார்ட் அறிவித்த ஆஃபரிலே பல்வேறு குழறுபடிகள் இருந்ததால் இதனை பாய்கார்ட் ஃப்ளிப்கார்ட் என கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மொய்தீன் என்பவர் ஆன்லைன் ஷாப்பிங் செய்துள்ளார். ஏசி மெக்கானிக்கான அவரது நண்பரான சுரேஷ் என்பவருக்கு ட்ரோன் கேமரா தேவைபட்டது.  பின்னர் ஃபிளிப்கார்டில் ரூ.79,064க்கு ஒரு  ட்ரோன் கேமரா இருந்ததை பார்த்த மொய்தீன் அதனை ஆர்டர் செய்துள்ளார். இதற்காக, கடந்த 20ம் தேதி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி உள்ளார்.ட்ரோன் கேமரா பார்சலும் வந்தது.  

ஆஃபர் என்ற பெயரில் ஆப்பு வைத்த Flipkart.. வாடிக்கையாளர்கள் பெரும் ஏமாற்றம்!

Latest Videos

undefined

பார்சல் மிகவும் தட்டையாக இருந்ததால் சந்தேகமடைந்த மொய்தீன் மற்றும் சுரேஷ் ஆகியோர் வீடியோ பதிவு மூலம் பார்சலை ஆவலடன் பிரித்தனர். அப்போது பார்சலில் 80 ரூபாய் ட்ரோனுக்கு பதிலாக, 100 ரூபாய் பொம்மை கார் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் டெலிவரி பாயைத் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் அவரோ அழைப்பை ஏற்கவில்லை.பின்னர், பிளிப்கார்ட்டில் புகார் அளித்தனர். விசாரித்து வருகிறோம் என்று நிறுவனம் பதில் அளித்து உள்ளது.
சுரேஷ் தன் தொழில் வளர்ச்சிக்காக ட்ரான் கேமராவை வாங்குவதற்கு தனது நண்பனிடம் கடனாக பெற்ற பணம் இப்படி வீணாகி விட்டதை எண்ணி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

என்ன Flipkart.. இப்படி ஏமாத்துறீங்களே.. நியாயமா இது?

மேலும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது, ​​பிளிப்கார்ட்டில் அதிக தள்ளுபடி விற்பனையால் ஆர்டர்கள் மற்றும் டெலிவரிகள் அதிகரித்துள்ளதாவும், எனவே, பார்சலில் பிழைகள் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

click me!