விண்கற்கள், விண் பாறைகள் பூமியின் மீது மோதி பேரழிவை ஏற்படுத்தாமல் தடுக்கும் வகையில், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புதிய சோதனையை நிகழ்த்தியுள்ளது.
சமீபகாலமாக விண்வெளியில் இருந்து விண்கற்கள் பூமியின் மீது மோதும் அபாயம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. விண்கல் அபாயத்தில் இருந்து பூமியை பாதுகாக்கும் வகையில், விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது அமெரிக்காவின் நாசா நிறுவனம் விண்கல் மீது செயற்கைக்கோளை மோதச் செய்யும் ‘டார்ட்’ என்ற புதிய சோதனையை நிகழ்த்தியுள்ளது. இதனால் விண்கல் சிதறி அதன் சுற்றுப்பாதையை விட்டு விலகி விடும் என்ற கணிப்பில் இந்தச் சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இன்டர்நெட் இல்லை என்றாலும் பணம் செலுத்தலாம்! வந்துவிட்டது UPI Lite
இதற்காக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, 160மீ விட்டம் கொண்ட டிமார்ஃபோஸ் என்ற பெரிய விண்கல் மீது செயற்கைக்கோளை மோதச் செய்வதற்காக செயற்கைக்கோள் ஒன்று ஏவப்பட்டது. அந்தச் செயற்கைக்கோள் தற்போது டிமார்ஃபோஸ் விண்கல் மோதி சிதறச் செய்துள்ளது.
இதனையடுத்து செயற்கைக்கோளில் இருந்து தனியாகப் பிரிந்த இத்தாலி நாட்டின் எல்ஐசிஏஐ கியூப் என்ற மற்றொரு செயற்கைக்கோள், இந்த மோதல் நிகழ்வை கண்காணித்தது. அது விண்கல் மீது செயற்கைக்கோள் மோதுவதையும், அதனால் எழுந்த புகை மண்டலத்தையும் துல்லியமாக பதிவு செய்து ஆய்வுக்காக பூமிக்கு அனுப்பியது.
அடடே! இப்படி ஒரு வெப்சைட்டா!! வேற லெவல்..
ஆய்வின் முடிவில், ஒரு விண்கல் மீது செயற்கைக்கோளை ஏவினால், அந்த விண்கல் சிதறி சுற்றுவட்ட பாதையை விட்டு விலகும் என்று தெரியவந்துள்ளது. நாசா நிறுவனம் இந்த சோதனையில் வெற்றிபெற்றதையடுத்து, உலக விஞ்ஞானிகள் பாராட்டையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.