இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு நீண்ட தடையில்லாத ஸ்டோரீஸை பதிவேற்றும் வசதி வழங்கப்படுகிறது. அதன்படி, 60 வினாடிகளுக்குக் குறைவான ஸ்டோரீயை பதிவேற்றும்போது, இனி அது தனித்தனி கிளிப்புகளாக பிரிக்கப்படாது.
மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியானது முக்கிய சமூக ஊடக பொழுதுபோக்கு செயலியாக திகழ்கிறது. லாக் டவுன் காலகட்டத்தில் அனைவரும் வீட்டில் முடங்கி இருந்த நிலையில் அனைவரும் தங்கள் பொழுது போக்குகள், தங்களின் திறமைகள் அனைத்தையும் இன்ஸ்டா ஸ்டோரீஸில் பதிவேற்றினர்.
இதில் உள்ள ஸ்டோரீஸில் பயனர்கள் தங்களது புகைப்படம், நமக்கு பிடித்த பாடல் வீடியோவை எடிட் செய்து பதிவிடலாம், ரீல்ஸ் பதிவேற்றிக் கொள்ளலாம், ஸ்டேட்டஸ் அப்டேட் செய்து கொள்ளலாம். இது போன்ற பல ஸ்வாரஸ்யமான பொழுது போக்கு அம்சங்கள் இந்த இன்ஸ்டாகிராமில் நிறைந்து உள்ளன.
இருப்பினும், ஒரு சிக்கல் இதில் இருந்தது. ஒரு ஸ்டோரியானது அதிக நொடிகளுடன் இருந்தால், இது 15 வினாடிக்கு தானாகவே கிளிப்களாக வெட்டப்படும். இது பல இன்ஸ்டா பயனர்களுக்கு அதிருப்தியாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் இருந்து புதிய அப்டேட் வந்துள்ளது. அதன்படி, இனி 60 வினாடிகள் வரை தொடர்ந்து ஸ்டோரீஸை இயக்கலாம் மற்றும் உருவாக்கலாம் என மெட்டா கூறி உள்ளது. இந்த புதிய மாற்றத்திற்கு பயனர்களும், பார்வையாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இனி பயனர்கள் வெட்டப்படாத ஸ்டோரீஸை பதிவேற்ற முடியும்.
இன்ஸ்டாகிராம் வீடியோவை முன்னிலைப்படுத்துவதால், யூடியூப், முகநூல் போன்ற மற்ற சமூக வலைதலங்களும் அதன் வீடியோ பிரிவில் நேர வரம்புகளை அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில், இன்ஸ்டா செயலியில் 90 வினாடிகள் வரை நீண்ட இன்ஸ்டாகிராம் ரீல்களுக்கான அம்சத்தை சேர்த்தது , முந்தைய 60 வினாடி வரம்பிலிருந்து.
அக்டோபர் மாதம் வரவுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள்!
இன்ஸ்டாகிராம் சமீபத்தில் 15 நிமிடங்களுக்கும் குறைவான புதிய வீடியோ பதிவுககைகள் தானாகவே ரீல்ஸாகப் பகிரப்படும் அமைப்பு மாற்றத்தை செய்துள்ளது. தற்போது உள்ள வசதிகளின்படி ஒரு பயனர், ஒரே முயற்சியில் 100 ஸ்டோரிகள் வரையில் பதிவிடலாம். இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.