OnePlus Diwali Sale: மிகக்குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி! ஆனால்…

Published : Sep 26, 2022, 05:44 PM IST
OnePlus Diwali Sale: மிகக்குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி! ஆனால்…

சுருக்கம்

ஒன்பிளஸ் தரப்பில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. குறிப்பாக இதில் ஸ்மார்ட் டிவிகளுக்கு மிகக்குறைந்த விலையில் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இறுதி மாதங்களில் பண்டிகை கால சிறப்பு விற்பனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் அமேசான், ஃபிளிப்கார்ட் ஷாவ்மி உள்ளிட்ட தளங்களில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இதே போல், ஒன்பிளஸ் தரப்பிலும் பிரத்யேகமாக தீபாவளி தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. 

கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு விற்பனை, செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. ஒன்பிளஸ் 32 இன்ச் டிவிகளுக்கு நல்ல விலைகுறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் டிவி 32 | 40 | 43 Y1 டிவிகளின் விலை வெறும் 9,499 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. 

ஒன்பிளஸ் டிவி வாங்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு, இது ஒரு நல்ல வாய்ப்பாகும். ஆண்ட்ராய்டு 9.0,  ஆக்ஸிஜன் ப்ளே, ஒன்பிளஸ் கனெக்ட் ஆகிய அம்சங்கள் உள்ளன. இது பெசல் இல்லா டிவியாகும். USB 2, ஈத்தர்நெட், HDMI 2, RF, ஆப்டிக்கல் பாயிண்ட், ஆடியோ வீடியோ போர்ட் ஆகியவை உள்ளன.

வாரண்டி:

வாரண்டியைப் பொறுத்தவரையில் வெறும் 1 வருட வாரண்டி தான் வழங்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் செலுத்தி, கூடுதலாக 1 வருட வாரண்டியைப் பெற்றுக்கொள்ளலாம். 

புது புது அப்டேட்களை கொண்டு வரும் யூடியூப் ... ஸ்வராஸ்யத்தில் வாடிக்கையாளர்கள்

குறைபாடுகள்:

இவ்வளவு அம்சங்கள் நிறைந்தாலும், யூடியூப்பில் தொழில்நுட்ப மதிப்பாய்வாளர்கள் ஒன்பிளஸ் டிவியில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக டிவியை தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு மேலாக பார்க்கும் போது, திடீரென திரை கருப்பாகி விடுவதாகவும், ஒரு தட்டு தட்டிய பிறகு தான் ஆன் ஆகுவதாகவும் கூறுகின்றனர். 

இந்த 9,500 ரூபாய் விலை அளவில், ரெட்மி, சாம்சங், TCL டிவிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Solar Panel vs Electricity Bill: எது உண்மையில் காஸ்ட்-எஃபெக்டிவ்? மின் கட்டணத்தில் இவ்வளவு வித்தியாசமா
Google Pixel Tag: பொருட்களை இனி தொலைக்கவே மாட்டீங்க.. ரூ.3,799 தான் விலை.. வசதிகள் பட்டையை கிளப்புது