Telegram Update : அடேய் WhatsApp, அங்க பாருடா.. Telegram பாத்து கத்துக்கோடா!!

By Dinesh TG  |  First Published Sep 26, 2022, 3:38 PM IST

வாட்ஸ்அப்பில் இல்லாத பல விஷயங்கள் டெலிகிராம் செயலியில் உள்ளன. அவற்றில் முக்கியமான மூன்று அம்சங்களைப் பற்றி இங்கு காணலாம். இவை விரைவில் வாட்ஸ்அப்பிலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


எடிட் வசதி

வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜை அனுப்பிவிட்டால், அதை டெலிட் மட்டும் தான் செய்ய முடியுமே தவிர, எடிட் செய்ய முடியாது. இந்த வசதி தற்போது டெலிகிராமில் உள்ளது. நாம் அனுப்பிய ஒரு மெசேஜை எடிட் செய்ய வேண்டுமென்றால், வெறும் அந்த மெசேஜை ஓரிரு நொடி அழுத்தி பிடித்தால் போதும், அதற்கான ஆப்ஷன்கள் வந்துவிடும். அதில் எடிட் சென்று, நீங்கள் அனுப்பிய மெசேஜை எடிட் செய்து, அனுப்பலாம். 

Latest Videos

undefined

மெசேஜை மறைக்கும் வசதி

டெலிகிராமில் ஒரு மெசேஜை டைப் செய்யும் போது, குறிப்பிட்ட வார்த்தைகளை மறைத்து வைத்து அனுப்பும் வசதி உள்ளது. அதாவது, நீங்கள் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பும் போது, நீங்கள் டைப் செய்த மெசேஜில் எந்த வார்த்தைகளை மறைக்க வேண்டுமோ, அதை செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு, Hide என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது அந்த மெசேஜை அனுப்பினால், எதிர்முனையில் இருப்பவர்களுக்கு நீங்கள் மறைத்த வார்த்தைகளானது குறியீடாக தெரியும். அதை கிளிக் செய்து பார்த்தால் மட்டுமே நீங்கள் என்ன டைப் செய்துள்ளீர்கள் என்பது எதிர்முனையில் இருப்பவருக்கு தெரியும்.

ஸ்மார்ட் போனை இரண்டாக பிரித்து பயன்படுத்த முடியமா? ஆண்ட்ராய்டு 13 வெளியிட்ட சூப்பரான அப்டேட்

சிறிது நேரம் கழித்து மெசேஜ் அனுப்பும் வசதி

டெலிகிராம் செயலியில் ஒரு மெசேஜை Schedule செய்யும் வசதி உள்ளது. அதாவது, ஒரு மெசேஜை டைப் செய்து விட்டு, அது எத்தனை மணிக்கு, எப்போது அனுப்பப்பட வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் குறிப்பிட்டுள்ள நேரத்தில், அந்த மெசேஜ் அனுப்பப்படும். இந்த அம்சத்தை வாட்ஸ்அப் இப்போது தான் சோதித்து வருகிறது. விரைவில் பயனர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப்பை காட்டிலும் டெலிகிராமில் பல்வேறு அம்சங்கள் இருப்பதால், டெலிகிராம் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாட்ஸ்அப்பிலும், பயனருக்குத் தேவையான அம்சங்களை உடனுக்குடன் கொண்டு வந்தால், பயனர்களின் மதிப்பை பெற முடியும். 

click me!