ஆன்லைனில் இலவசமாக படம் பார்க்க வேண்டுமா? இதோ 6 நேர்மையான வழிகள்!

By Dinesh TG  |  First Published Sep 26, 2022, 2:20 PM IST

Amazon Prime, Disney+ Hotstar போன்ற OTT தளத்தில் சந்தா செலுத்தி படம் பார்க்கும் சூழலில், பணமே செலுத்தாமல், இலவசமாக படம் பார்க்கும் வசதிகளும் உள்ளன. 


Mx Player

MX Player என்பது ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். இதில் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்கள் உள்ளன. MX Player-ல் படம் பார்ப்பதற்கு, பணமே செலுத்த வேண்டாம். இலவசமாகவே படம் பார்க்கலாம். இருப்பினும் விளம்பரங்கள் அதிகளவு வரலாம். விளம்பரங்களும் இல்லாமல் படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள், நீங்கள் விரும்பும் படத்தை MX Player-ல் இருந்து உங்கள் கணினி/மொபைலுக்கு டவுன்லோடு செய்து பார்க்கலாம். MX Player இணையதளத்திற்குச் செல்ல இங்கு கிளிக் செய்யவும்: https://www.mxplayer.in/

Tap to resize

Latest Videos

Animefox

Animefox என்பது அனிமேஷன் திரைப்பட பிரியர்களுக்காகவே உருவாக்கப்பட்ட தளமாகும். இதில் முழுக்க முழுக்க அனிமேஷன், கார்ட்டூன் படங்கள் தான் இருக்கும். மேலும், சீனா, கொரிய அனிமேஷன் படங்கள் கூட ஆங்கில மொழியில் டப் செய்யப்பட்டு, பதிவேற்றப்பட்டுள்ளது. அனிமேஃபாக்ஸ் இணையதள முகவரி: https://animefox.tv/

Plex

நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம் போலவே பிளெக்ஸ் என்பதும் திரைப்படங்கள் நிறைந்திருக்கும் தளமாகும். குறிப்பாக அனிமேஷன், காமெடி, ஆக்ஷன் படங்கள் உள்ளன.  https://www.plex.tv/ என்ற இணையதளத்திற்குச் சென்று உங்களுக்குப் பிடித்த படங்களை இலவசமாக கண்டு மகிழலாம். 

ஆப்பிள் ஐபோனுக்கு வரலாறு காணாத தள்ளுபடி?

Jio Cinema
 

பெரும்பாலானோருக்கு ஜியோ சினிமா பற்றி தெரிந்திருக்கும். நீங்கள் ஜியோ வாடிக்கையாளர்களாக இருந்தால், ஜியோ சினிமா வெப்சைட்டிற்கு சென்று, உங்கள் மொபைல் எண்னை கொடுத்து, உள்நுழைந்தாலே போதும். ஜியோவில் வரிசை கட்டிய படங்களை இலவசமாக பார்க்கலாம். ஜியோ சினிமா தளத்திற்குச் செல்ல இங்கு கிளிக் செய்யவும்: https://www.jiocinema.com/

Airtel Xtream
 

ஜியோவை போலவே ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் என்பதும் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளர்களாக இருந்தால், உங்கள் மொபைல் எண்னை கொடுத்து, ஏர்டெல் எக்ஸ்ட்ரீமில் உள்ள படங்களைப் பார்க்கலாம். ஜியோவைப் போலவே ஏர்டெல் எக்ஸ்ட்ரீமிலும் ஏராளமான படங்கள் உள்ளன. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழி படங்களும், தமிழ் டப்பிங் திரைப்படங்களும் உள்ளன. ஏர்டெல் எகஸ்ட்ரீம் இணையதள முகவரி :https://www.airtelxstream.in/

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு !! 5G சோதனை முடிவுகள் வெளியானது

Vi Movies & Tv
 

வோடஃபோன் ஐடியா சந்தாதாரர்கள் விஐ மூவிஸ் & டிவி என்ற தளத்தைப் பயன்படுத்தலாம். இதிலும் குறிப்பிட்ட வகையிலான திரைப்படங்கள், மற்ற மொழி படங்கள், டிவி நிகழ்ச்சிகள் உள்ளன. நீங்கள் ஒருவேளை வோடபோன் ஐடியாவைப் பயன்படுத்துபவராக இருந்தால், https://moviesandtv.myvi.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று,  உங்கள் நம்பரை உள்ளிட்டு படங்களைப் பார்க்கலாம்.

click me!