அக்டோபர் மாதம் வரவுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள்!

By Dinesh TGFirst Published Sep 26, 2022, 12:37 PM IST
Highlights

புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க விரும்புகிறவர்கள், இந்த அக்டோபர் மாதம் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் வருகின்றன என்பதையும் தெரிந்து கொண்டு, சிறந்த அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
 

பொதுவாக உலகளவில் அறிமுகம் செய்யப்படும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் அறிமுகமாகின்றன. அந்த வகையில், கூகுகள் பிக்சல், ஷாவ்மி, மோட்டோ என பல ஸ்மார்ட்போன்கள் இந்த அக்டோபர் மாதம் அறிமுகமாக உள்ளன. 

Google Pixel 7 Series

கூகுள் பிக்சல் சீரிஸ் என்றாலே அதன் கேமராவும், UI அம்சங்களையும் வேறு எந்த ஸ்மார்ட்போனாலும் மிஞ்ச முடியாது. இந்த அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி கூகுள் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வரவுள்ளன. பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ என இரண்டு விதமாக வருகின்றன. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் டென்சார் ஜி2 SoC பிராசருடன் வருகிறது. பிக்சல் 7 ஸ்மார்ட்போனின் விலை கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாயும், பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 85 ஆயிரம் ரூபாய் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Moto Ege 30 Series

மோட்டோரோலா தரப்பில் மோட்டோ எட்ஜ் 30 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் 6.28 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 695, 4020mAh பேட்டரி, 68W அதிவேக சார்ஜர், 5W வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவை உள்ளன. இந்தியாவில் மோட்டோ எட்ஜ் 30 நியோ ஸ்மார்ட்போனின் விலை 18 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Oneplus Nord 3

ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் பிரியர்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனும் இந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் 6.78 இன்ச் திரை, MTK டிமன்சிட்டி 8100 SoC பிராசசர், 50MP டிரிபிள் கேமரா, 4500 mAh சக்தி கொண்ட பேட்டரி ஆகியவை உள்ளன. இது 30 ஆயிரம் ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்படலாம், தொடக்கத்தில் அறிமுக சலுகைகளும் இருக்கலாம்.

Xiaomi 12T

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி இடத்தில் இருக்கும் ஷாவ்மி நிறுவனம், இந்த மாதம் ஷாவ்மி 12T ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. கிட்டத்தட்ட 50 ஆய்ிரம் ரூபாய் மதிப்பில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போனில், 108MP பிரைமரி கேமரா, மீடியாடெக் டிமன்சிட்டி 81000 SoC பிராசசர் உள்ளது. 

Flipkart, Amazon இல் ஆர்டர் செய்தவுடன் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்?

Xiomi 12 Lite

இதே போல், ஷாவ்மி 12 லைட் ஸ்மார்ட்போனும் இந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்திய பதிப்பில் ஷாவ்மி 12 லைட்டும் பட்டியலிடப்பட்டுள்ளதால், அக்டோபர் மாத இறுதிக்குள் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. 

Poco M5s

10 ஆயிரம் ரூபாய் பட்ஜெட் விலையில் போகோ M5s ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசசர், 64 மெகா பிக்சல் கேமரா, 5000mAh பேட்டரி, 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே ஆகிய அம்சங்கள் உள்ளன.

click me!