வாட்ஸ்அப்பில் இனி நமது குரலையும் பதிவு செய்து ஸ்டேட்டஸாக வைக்கும் அம்சம் கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
வாட்ஸ்அப்பில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து அப்டேட்டுகள் மும்முரமாக சோதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மேலும் ஒரு புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் சோதிக்கப்பட்டு வருகிறது.
இதுவரையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் போட்டோக்கள், வீடியோக்கள், மெசேஜ்களை வைத்து வருகிறோம். இனி கூடுதலாக வாய்ஸ் மெசேஜையும் ஸ்டேட்டஸாக வைக்க முடியும். இதுதொடர்பாக வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் சோதிக்கப்பட்டு வரும் அம்சத்தின் படங்களும் வெளியாகியுள்ளது.
undefined
அதன்படி, வாட்ஸ்அப் பீட்டா 2.22.16.3 என்ற ஆண்ட்ராய்டு பதிப்பில் வாய்ஸ் ஸ்டேட்டஸ்க்கான சோதனை நடந்து வருகிறது. சாதாரணமாக ஒருவருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது போல், ஸ்டேட்டஸ் பகுதியில் அனுப்பலாம். இதற்காக ஸ்டேட்டஸ் திரையில் ‘மைக்’ லோகோ உள்ளது. அதை கிளிக் செய்து, 30 நொடிகள் வரையிலான குரல்பதிவை வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்ளலாம்.
இன்டர்நெட் இல்லை என்றாலும் பணம் செலுத்தலாம்! வந்துவிட்டது UPI Lite
இதே போல், Do Not Disturb என்ற அம்சத்தையும் வாட்ஸ்அப் செயலி சோதித்து வருகிறது. ஆனால், இது பயனர்களுக்கு எந்த வகையில் வசதியாக இருக்கும் என்பது குறித்து தெளிவான செய்திகள் எதுவம் வரவில்லை. வாட்ஸ்அப்பில் இந்த மாதம் வந்துள்ள புதிய அம்சங்களை பெறுவதற்கு, உங்கள் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்யவும்.