ஸ்மார்ட் போனை இரண்டாக பிரித்து பயன்படுத்த முடியமா? ஆண்ட்ராய்டு 13 வெளியிட்ட சூப்பரான அப்டேட்

By Dinesh TG  |  First Published Sep 24, 2022, 10:50 AM IST

ஆண்ட்ராய்டு 13 ஆனது ஒரு வித்தியாசமான அம்சத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி, ஸ்மார்ட் ஃபோனை இரண்டாக பிரித்து கூட பயன்படுத்தலாம்


இப்போது உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் ‘ஸ்பிலிட்’ என்ற ஆப்ஷன் உள்ளது. அதைப் பயன்டுத்தி திரையை இரண்டாக பிரித்து, முதல் திரையில் ஒரு செயலியையும், மற்றொன்றில் வேறு பயன்பாடுகளையும் பயன்படுத்த முடியும்.

இந்த ஸ்பிலிட் ஆப்ஷனில் எல்லா செயல்பாடுகளையும் மேற்கொள்ள முடியது. குறிப்பாக ஸ்மார்ட்போன் அப்டேட் ஆகிறது என்றால், அது அப்டேட் ஆகி முடியும் வரையில், வேறு எந்தச் செயலியையும் பயன்படுத்த முடியாது. இப்படியான சூழலில், மேம்படுத்தப்பட்ட ஸ்பிலிட் ஆப்ஷன் ஆண்ட்ராய்டு 13 தளத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய அம்சம் எப்பொழுது செயல்படும் என்றால் நம்முடைய ஆண்ட்ராய்டு ஃபோன் எப்பொழுது அப்டேட் கேட்கிறதோ அப்பொழுது இது A மற்றும் B என இரு பிரிவுகளாக பிரியும்.

Tap to resize

Latest Videos

 ஒரு பகுதியில் அப்டேட்டாகிக் கொண்டிருந்தால் மற்றொரு பகுதியை நாம்   பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் நாம் எதாவது ஒரு அவசர வேலைக்காக நம் ஃபோனை எடுக்கும்பொழுது அது அப்டேட் ஆக வேண்டும் என்று நோட்டிஃபிகேஷன் வந்தால், ஸ்மார்ட்போனை இரண்டாக பிரித்து, அப்டேட் ஒரு புறம், இதர வேலைகள் மறுபுறமும் செய்யலாம்.  அதாவது, ஸ்மார்ட்போனில் அப்டேட் வரும் போது A,B என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும். A தளத்தில் அப்டேட் ஆகிக்கொண்டிருந்தால், B பிரிவில் நமது வழக்கமான செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.

என்ன Flipkart.. இப்படி ஏமாத்துறீங்களே.. நியாயமா இது?

இது சோதனை அளவில் மட்டுமே இருந்து வருகிறது. செயல்பாட்டிற்கு வரும் போது தான், அதில் உள்ள பலன்கள், சிரமங்கள் அனைத்தும் தெரியவரும். இதே போல் இதற்கு முன் நாம் பிசி அல்லது லேப்டாப்களிலும் இரண்டு விண்டோ முறை பயன்படுத்தும் வசதிகள் இருந்தன, அதிலிருந்து தான் இந்த ஸ்பிலிட் வசதியே ஸ்மார்ட்போனில் கொண்டு வரப்பட்டது.

click me!