ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு !! 5G சோதனை முடிவுகள் வெளியானது

By Dinesh TGFirst Published Sep 23, 2022, 6:28 AM IST
Highlights

இந்தியாஸ் ஃபாஸ்டஸ்ட் ஸ்ட்ரீமிங் நெட்வொர்க் என்று அழைக்கப்படும் ஏர்டெலில் இனி 4G யின் வேகம் மிக குறைவாக இருக்கும் என்று ஏர்டெல் தரப்பில் கூறியுள்ளது

தற்பொழுது அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் ஏராளமான 5G மாடல்ஸ்களுக்கான ஆஃபர்களை வெளியிட்டுள்ளது. மிக குறைந்த விலையில் தரமான ஃபோன்களை பெற்றுக்கொள்ளலாம் என்று ஆஃபர்களை குவித்து வருகின்றன.

இந்த நிலையில் 5G யின் சோதனை முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இந்தியாவில் 5G பயன்பாடு வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏர்டெல் நிறுவனம் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது

அதன்படி,  ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 5G இணையத்தை சோதித்ததில் சில முடிகவுள் வந்தன. இதில் ஜியோ நிறுவனத்தின் 4G யானது இதற்கு முன் செயல்பட்டது போலவே  செயல்படும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் 5G வந்துவிட்டால் ஏர்டெலில் 4G யின் இணைய வேகம் குறைய வாய்ப்புள்ளதாகவும் சோதனை முடிவில் தெரிகிறது.

ஜியோ நிறுவனமானது 5G சேவையை தனித்து இயங்கக்கூடிய முறையில் கொண்டு வர உள்ளது. அதாவது 5G கும் 4G கும் எந்த விதமான தொடர்பும் இருக்காது. இதனால் அனைத்து வாடிக்கையாளர்களும் 4G யில் இருந்து 5G க்கு மாறும்பொழுது 4G யின் வேகம் அதிகமாகவே வாய்ப்புள்ளதாகவும் கூறி உள்ளனர்.
ஆனால் ஏர்டெல் நிறுவனத்தில் அவ்வாறு இல்லை . இதில் 4G யை சார்ந்தே 5G தொழில்நுட்பம் வரவுள்ளதால் ஜியோவை ஒப்பிடும்போது, ஏர்டெலில் இனி 4ஜி நெட்வொர்க்கின் வேகம் சற்று குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலவரத்தை பார்க்கும் போது, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவை முறியடிக்க, அம்பானி சிறந்த ஸ்டாண்டலோன் 5ஜி நெட்வொர்க்கில் வேகமான, நம்பகமான 5ஜி சேவைகளை வழங்குவதற்கான வியூகத்தை வகுத்துள்ளது போல் தெரிகிறது.

Flipkart கட்டண உயர்வு… கேஷ் ஆன் டெலவரி கொடுத்தாலும் சிக்கல், வாங்கிய பொருளை ரிட்டர்ன் செய்தாலும் சிக்கல்!

தற்போதைய சூழலில், 4G சேவையைப் பொறுத்தவரையில், ஜியோவை விட ஏர்டெல் அதிக கட்டணத்தை வசூல் செய்து வருகின்றது. இனி 5G வரவுள்ள நிலையில் இணைய வேகம் ஏர்டெல் நிறுவனத்தை காட்டிலும் ஜியோவில் அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் அதற்கான கட்டண விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

இதனிடையே,  ட்விட்டர் ஸ்பேஸ் கலந்துரையாடலின் போது ஏர்டெல்லின் CTO (தலைமை தொழில்நுட்ப அதிகாரி), ரந்தீப் செகோன் உள்ளிட்ட தொழில்துறையினருடன் பேசினார். அப்போது அவர் ‘4G மற்றும் 5G திட்டங்களுக்கு இடையே அதிக விலை வேறுபாடு இருக்காது என்பதை உணர்ந்தேன் . ஆனால் நுகர்வோருக்கு நன்மைகள் எவ்வாறு தொகுக்கப்படும் என்பது நாம் காத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Flipkart, Amazon இல் ஆர்டர் செய்தவுடன் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்?

இந்த சோதனை முடிவு ஜியோ நிறுவனத்திற்கு சாதகமா அமைந்துள்ளதால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஜியோவிற்கு மாற வாய்ப்புள்ளதாக சமூக வலை தளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.
 

click me!