ஹேக்கர்களிடம் சிக்காமல் உங்கள் தனிப்பட்ட படங்கள், வீடியோக்களைப் பாதுகாப்பாக வைப்பது எப்படி?

By Raghupati RFirst Published Sep 21, 2022, 4:40 PM IST
Highlights

டிஜிட்டல் உலகில் நமது போட்டோ, வீடியோ போன்ற தனிப்பட்ட டேட்டாவை பாதுகாப்பாக வைப்பது என்பது சவாலான விஷயம் தான்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒரு புறம் ஆன்லைன் மோசடி குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையிலும், அதற்கு ஏற்ப சட்டதிருத்தங்கள் இன்னும் கடுமையாகவில்லை. எனவே, நமது பாதுகாப்பை நாம் தான் உறுதி செய்ய வேண்டும். அந்த வகையில், ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

ஆன்டிவைரஸ் சாப்ட்வேர் பயன்பாடு

நீங்கள் எப்படிபட்ட கம்ப்யூட்டர், மொபைல் வைத்திருந்தாலும் அதில் ஆன்டிவைரஸ் இருக்க வேண்டும். அதுவும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் வைத்திருக்க வேண்டும். இன்னும் சிலர், ஆன்டிவைரஸ் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்தால், மெமரி காலியாகுவதாக கூறி, அதை இன்ஸ்டால் செய்யாமலேயே விட்டுவிடுகின்றனர்.

 நமது தனிப்பட்ட டேட்டாவுக்கு முன், மெமரி எல்லாம் கருத்தில் கொள்ளக்கூடாது. பாதுகாப்பு என்பது தான் முதல்படி, எனவே, குறைந்தது ஏதாவது ஒரு நல்ல ஆன்டிவைரஸை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகளுக்கு..APPLE WATCH: 89 ஆயிரத்திற்கு வாட்ச் அறிமுகம் செய்த ஆப்பிள்!!

பாஸ்வேர்டு போட்டுக் கொள்ள வேண்டும்

உங்கள் போனில், கம்ப்யூட்டரில் பிரத்யேகமாக ஒரு பாஸ்வேர்டு வைத்து, சாதனத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஒரு மாதத்திற்கும் பாஸ்வேர்டை மாற்ற வேண்டும். சிலர் மிக தந்திரமாக செயல்படுவதாக நினைத்து, போன், வங்கி பாஸ்வேர்டுகளை போனிலேயே சேமிக்கிறார்கள். 

இது கிட்டத்தட்ட திருடன் கையில் சாவி கொடுப்பது போலாகும். முடிந்தவரையில் பாஸ்வேர்டை மனதில் பதிந்துகொள்ளுங்கள். அல்லது மற்றவர்களுக்கு தெரியாதவாறு குறித்துக்கொள்ளுங்கள்.

சமூகவலைதளங்களில் படங்களை பதிவேற்றுதல்

சிறிது சந்தோஷத்திற்காக சமூகவலைதளங்களில் படங்களைப் பகிரலாம். ஆனால், அதையே முழு நேர வேலையாக வைக்கக்கூடாது. நமது ஒவ்வொரு படங்களும் ஒரு முக்கியமான டேட்டா என்பதை நினைவில் கொள்ளவும்.

மேலும் செய்திகளுக்கு..Realme C33: 9 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியான ரியல்மி ஸ்மார்ட் போன்..!

தேவையற்ற ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்யாதீர்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் கூகுள் ப்ளே ஸ்டோருக்கான அணுகல் இருக்கும். எனவே, தெரிந்தோ தெரியாமலோ நமக்கு தேவையே இல்லாத, அங்கீகரிக்கப்படாத செயலிகளை ஸ்மாரட்போனில் இன்ஸ்டால் செய்யாதீர். பார்ப்பதற்கு அசல் பயன்பாடு செயலி போன்று இருக்கும். 

அப்படி இருந்தாலும், அவை ஹேக்கர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம். எனவே, தேவையற்ற செயலிகளை இன்ஸ்டால் செய்ய வேண்டாம். இதுபோன்ற ஹேக்கர்களிடம் இருந்து வரும் அழைப்புகளையும் எடுக்க வேண்டாம்.

மேலும் செய்திகளுக்கு..WhatsApp-ல் இனி ஸ்கோரல் செய்து மெசேஜ்களைப் பார்க்கத் தேவையில்லை.. வரப் போகிறது புதிய அப்டேட்!

click me!