அடடே! வெறும் 5,850 ரூபாய்க்கு Redmi ஸ்மார்ட்போனா!!

By Thanalakshmi V  |  First Published Sep 21, 2022, 3:43 PM IST

இந்தியாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வதற்கே பல நிறுவனங்கள் தயங்கும் நிலையில், ஷாவ்மி நிறுவனம் வெறும் 6 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் ரெட்மி ஸ்மார்ட்போனை வழங்கி வருகிறது.
 


இந்தியாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வதற்கே பல நிறுவனங்கள் தயங்கும் நிலையில், ஷாவ்மி நிறுவனம் வெறும் 6 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் ரெட்மி ஸ்மார்ட்போனை வழங்கி வருகிறது.

ஷாவ்மி நிறுவனம் சத்தமே இல்லாமல் Redmi A1 என்ற பெயரில் சமீபத்தில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது, இதில் லெதர் தோனியில் ஸ்மார்ட்போனின் டிசைன் உள்ளது, பட்ஜெட் பிரிவில் இருந்தாலும், அதற்கு ஏற்ப நல்லதொரு டிசைனில் வெளிவந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:Vivo ஸ்மார்ட்போன்ளுக்கு அட்டகாசமான ஆஃபர்கள் அறிவிப்பு!

பொதுவாக ரெட்மி என்றாலே ஆண்ட்ராய்டு MiUI தான் இருக்கும். ஆனால், இந்த ஸ்மார்ட்போனானது ஸ்டாக் ஆண்ட்ராய்டில் இயங்குகிறது. ரெட்மி மொபைலும் வேண்டும், அதே நேரத்தில் ஸ்டாக் ஆண்ட்ராய்டு இருந்தாலும் வசதியாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு ரெட்மி ஏ1 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

மொபைலின் மேற்புறத்தில் இயர்பீஸ், ஸ்பீக்கர் உள்ளது. பக்கவாட்டில் டூயல் சிம்மும், மெமரிகார்டுக்கு என பிரத்யேக இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு டூயல் 4ஜி ஸ்மார்ட்போன் ஆகும். போனின் கீழ்புறத்தில் மைக், சார்ஜிங் போர்ட், 3.5 mm ஆடியோ ஜேக் ஆகியவை உள்ளது. 

மேலும் படிக்க:iPhone காலவரிசையில் நீண்ட வருடங்களாக இருந்த குறை சரிசெய்யப்பட்டது!

ரெடமி ஏ1 ஸ்மார்ட்போனில் பேட்டரி பயன்பாடு என்பது குறைவாகவே இருப்பதால், 2 நாட்கள் வரையில் பேட்டரி நீடித்து உழைக்கும். போனின் பின்பக்கத்தில் இரண்டு கேமராக்களும், முன்பக்கத்திலும் ஒரு செல்பி கேமராவும் உள்ளது. கேமரா தரமானது விலைக்குத் தகுந்தவாறு சுமாராகத் தான் இருக்கிறது. அதே போல், விலைக்கு ஏற்பவே பழைய மீடியாடெக் பிராசசரும் வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு அல்லது புதிதாக ஸ்மார்ட்போனை பயன்படுத்த விரும்பும் பயனர்களுக்கு தாரளமாக ரெட்மி ஏ1 ஸ்மார்ட்போனை வாங்கலாம். குறைந்தளவு பயன்பாட்டுக்கு மட்டுமே இந்த போன் பயன்படுத்தலாம். நிறைய ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்யவோ, நீண்ட நேரம் தொடர்ச்சியாக பயன்படுத்தினாலோ போனில் கோளாறு ஏற்படும். 

ரெட்மி ஏ1 ஸ்மாரட்போனின் விலை 6,499 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இருப்பினும் இது பண்டிகை சீசன் என்பதால் ஆஃபரில் 5,800 ரூபாய் வரைக்கும் கூட பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. 
 

click me!