நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நெப்டியூன் கிரகத்தை மிகத்துல்லியமாகவும் படம்பிடித்துள்ள நிலையில், தொழில்நுட்பக கோளாறு ஏற்பட்டதால் ஆய்வுபணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகின் ஆற்றல்மிகுந்த செயல்பாடுகளைக் கொண்டது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. விண்வெளி குறித்த மேம்பட்ட ஆய்வுகளுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனமானது, இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணில் நிலைநிறுத்தியது.
இதனையடுத்து பல்வேறு கோணங்களில் பிரபஞ்சத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. அந்த படங்கள் அனைத்தும் விஞ்ஞானிகளையும், உலக நாடுகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், வியாழன் கிரகத்தை மிகத்துல்லியமாக படமெடுத்தது. இதுவரை மற்ற விண்கருவிகள் எடுக்காத வகையில், அட்டகாசமான முறையில் அதிக தெளிவுத்திறனுடன் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி செயல்பட்டது.
undefined
Whatsapp Update: அட அட அட! பல நாள் கனவு நிறைவேறுகிறது.. அனைவரும் எதிர்பார்த்த வசதி வரப்போகிறது!!
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி தற்போது தொலைநோக்கியுள்ள நடு அகச்சிவப்பு கதிர் கருவியில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. நெப்டியூன் கிரகத்தை மிகத்துல்லியமாக படம்பிடித்துள்ள நிலையில், இந்த செய்திகளும் வந்துள்ளன.
Vivo ஸ்மார்ட்போன்ளுக்கு அட்டகாசமான ஆஃபர்கள் அறிவிப்பு!
பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவை போல், கிட்டத்தட்ட 30 மடங்கு தொலைவில் நெப்டியூன் கிரகம் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1989 ஆம் ஆண்டில் வொயேஜர் 2 என்ற விண்ணாய்வி தான் நெப்டியூன் கிரகத்தை ஓரளவு காட்டியது. அதன்பிறகு, இதுவரையில் நெப்டியூன் கிரகத்தை பெரிதாக எந்தவொரு தொலைநோக்கியும் காட்ட முடியவில்லை.
இந்த நிலையில், நெப்டியூன் கிரகத்தின் பிரகாசமான பந்து போன்ற கோள் அமைப்பையும், அதைச் சுற்றியுள்ள வளையங்களையும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மிகத்துல்லியமாக படம்பிடித்துள்ளது. ஒருபுறம் இவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும், மறுபுறம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு முடங்கியிருப்பது ஆராய்ச்சியாளர்களை கவலையடைச் செய்துள்ளது. இதற்கு முன்பு பல முறை விண்வெளி சிறு கற்கள், பாறைகளால் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.