இன்டர்நெட் இல்லை என்றாலும் பணம் செலுத்தலாம்! வந்துவிட்டது UPI Lite

By Dinesh TG  |  First Published Sep 24, 2022, 2:18 PM IST

மத்திய அரசின் BHIM (பீம்) செயலியில், UPI Lite மூலம் இன்டர்நெட் இல்லாமலே பணம் செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் குறைந்த அளவிலான கட்டணங்களை இன்டர்நெட் இல்லாமலேண செலுத்தலாம்.


வழக்கத்தில் கூகுள் பே, போன் பே என ஏராளமான டிஜிட்டல் பணபரிவர்த்தனை செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் பீம் செயலியும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. 

அந்தவகையில், நேற்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் UPI Lite என்ற அம்சத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் பயனர்கள் UPI பின்கோடு இல்லாமலே, இன்டர்நெட் இல்லாமலே 200 ரூபாய் வரையில் வரையில் செலுத்த முடியும். இந்த அம்சமானது மத்திய அரசின் BHIM (பீம்) செயலியில் மட்டுமே தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் குறைந்த அளவினா பணத்தை மட்டுமே செலுத்த முடியும்.

Latest Videos

undefined

விமானத்தில் அதிவேக இன்டர்நெட்டா ? எலோன் மஸ்கின் அடுத்த முயற்சி

பின்வரும் எட்டு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் UPI Lite அம்சத்தை பயன்படுத்த முடியும்: பாரத ஸ்டேட் வங்கி (SBI), யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, உத்கர்ஷ் சிறு நிதி வங்கி, கனரா வங்கி, HDFC வங்கி, இந்தியன் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி.

UPI Lite முக்கிய அம்சங்கள்:
மீண்டும் மீண்டும் UPI பின்னை எண்டர் செய்ய தேவையில்லை. 
இன்டர்நெட் இல்லாவிட்டாலும் UPI பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
UPI Lite ஆனது 200 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளை அனுமதிக்கும்.
பயனர்கள் அதிகபட்சமாக ரூ. 2000 ஐ UPI வாலட்டில் எந்த நேரத்திலும் வைக்கலாம்.
ஒரு செயலியில் ஒரு கணக்கிற்கு மட்டுமே UPI லைட்டை இயக்க முடியும்

click me!