நீங்கள் வாட்ஸ்அப் குரூப்பில் உள்ளீர்களா? அப்படி என்றால் எச்சரிக்கை!

By Dinesh TGFirst Published Nov 23, 2022, 4:48 PM IST
Highlights

வாட்ஸ்அப் குரூப்பில் தனியுரிமை விஷயங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி, பாதுகாப்பாக வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து இங்குக்காணலாம்.

WhatsApp குரூப்பில் கம்யூனிட்டிகள், குடும்பங்கள், நிறுவனங்கள், பள்ளிகள் இன்னும் பலவற்றில் உள்ளவர்கள் இருக்கும் இடமாக உள்ளது. குரூப் வகைக்கு ஏற்ப, குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும்.  மேலும், வாட்ஸ்அப் குரூப்பில் தனிப்பட்ட விஷயங்களில் கவனக்குறைவாக இருக்கும்பட்சத்தில் சில சிக்கல்களுக்கு வழிவகுத்திடும். அவ்வாறு தனிப்பட்ட விஷயங்களில் பாதுகாப்பாக இருக்கும் விதமாக சில ஆப்ஷன்கள் வாட்ஸ்அப்பில் உள்ளன. 

தனிப்பட்ட நபருக்கோ அல்லது குரூப்பிலோ மெசேஜ் அனுப்பும் போது, சந்தேகத்திற்குரிய நபர்கள், வாட்ஸ்அப் எண்னைக் கண்டால், அதைத் தடுக்கவும், அது குறித்து புகார் அளிக்கவும் முடியும். மேலும், புகாரளிக்கப்பட்ட மெசேஜ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க விரும்பினால், அந்த மெசேஜ்களை உண்மைநிலைச் சரிபார்க்கும் பணியாளர்கள் அல்லது சட்ட அமலாக்கப் பணியாளர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இதற்கும் வாட்ஸ்ப்அப்பில் ஆப்ஷன்கள் உள்ளன

வாட்ஸ்அப்பில் அதிகபட்சமாக ஐந்து வெவ்வேறு கணக்குகளுக்கு மட்டுமே ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்பது பலருக்கும் தெரியும். இருப்பினும், வாட்ஸ்அப் குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபட்ட அளவில் உள்ளன. ஒரு நேரத்தில் ஒரு குழு மட்டுமே "முன்னனுப்பப்பட்ட லேபிள்" கொண்ட மெசேஜ்களைப் பெறலாம். ஐந்துபேருக்கு மட்டுமே ஃபார்வேர்டு செய்ய முடியும் என்பது இங்கே பொருந்தாது. 

WhatsApp Update: இனி WhatsApp Desktop ஸ்கிரீன் லாக் செய்யலாம்!

Whatsapp இல் உங்கள் தொலைபேசி எண்ணை வைத்திருப்பவர்கள் மட்டுமே உங்களை குரூப்பில் சேர்க்க முடியும். வாட்ஸ்அப்பின் குரூப் இன்வைட்டேஷன் அமைப்பு மற்றும் குரூப்களுக்கான பிரைவேசி செட்டிங்ஸ் பயன்படுத்தி, யாரெல்லாம் உங்களை குரூப்பில் சேர்க்கலாம் என்பதை நீங்களே தேர்வு செய்யலாம்

வரிசையான சேட் மெசேஜில் எல்லோரும் இருக்கும் போது, யாருக்கும் தெரியாமல் அந்த குரூப்பில் இருந்து வெளியேறவும் முடியும். நீங்கள் வெளியேறுவது குரூப் அட்மின்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும்.

எந்தவொரு குரூப் உறுப்பினரும் இயல்பாக மெசேஜ் அனுப்பலாம் மற்றும் குரூப்  சப்ஜக்ட், ஐகான் அல்லது விளக்கம் போன்ற விவரங்களைத் திருத்தலாம். இருப்பினும், WhatsApp அமைப்புகளைப் பயன்படுத்தி குரூப்பில் யார் மெசேஜ் அனுப்பலாம் என்பதை நிர்வாகிகள் கட்டுப்படுத்தலாம்.

இந்தியாவில் உண்மைச் சரிபார்ப்பு நிறுவனங்கள் கிட்டத்தட்ட பத்து செயல்படுகின்றன. அந்த நிறுவனங்கள் வாட்ஸ்அப் மூலமாக வாட்ஸ்அப்பில் பயனர்களை அடையாளம் காணவும், மதிப்பாய்வு செய்யவும், சரிபார்க்கவும், அத்துடன் தவறான தகவல் பரவுவதைத் தடுக்கும் முயற்சியிலும் உதவுகின்றன. எனவே, வாடிக்கையாளர் எந்தெவாரு மெசேஜையும் ஃபார்வேர்டு செய்யாமல், அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

click me!