அமேசானில் மறுபடியும் ஆட்குறைப்பு! வேலை இழக்கும் ஊழியர்களுக்கு அனுப்பிய ஷாக்கிங் மெசேஜ்!

By SG Balan  |  First Published Oct 8, 2023, 4:06 PM IST

வேலை நீக்க நடவடிக்கை அமேசான் நிறுவனம் முழுவதும் உள்ள உலகளாவிய தகவல் தொடர்பு ஊழியர்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே என்றும் சொல்லப்படுகிறது.


அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் உள்ள அமேசானின் தகவல் தொடர்பு பிரிவுகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. "அமேசான் ஸ்டுடியோஸ், பிரைம் வீடியோ மற்றும் மியூசிக் ஆகியவற்றின் தகவல் தொடர்பு பிரிவுகளில் 5 சதவீதத்க்கும் அதிகமான பணியாளர்கள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வேலை நீக்க நடவடிக்கை அமேசான் நிறுவனம் முழுவதும் உள்ள உலகளாவிய தகவல் தொடர்பு ஊழியர்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே என்றும் சொல்லப்படுகிறது.

Tap to resize

Latest Videos

"நாங்கள் எங்கள் குழுக்களின் கட்டமைப்பை மதிப்பீடு செய்து, வணிகத் தேவைகளின் அடிப்படையில் மாற்றங்களைச் செய்கிறோம். சமீபத்திய மதிப்பீட்டைத் தொடர்ந்து, எங்கள் தகவல் தொடர்பு குழுவில் உள்ள சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்களை அகற்றுவதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளோம்" என்று அமேசான் செய்தித் தொடர்பாளர் பிராட் கிளாசர் கூறுகிறார்.

ஹமாஸ் - இஸ்ரேல் போர் மூண்டதால் மீண்டும் அப்படியே பலித்த நாஸ்டர்டாமஸ் கணிப்பு!

"இந்த ஊழியர்களின் பங்களிப்புகளுக்காக நாங்கள் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும் அவர்களின் அடுத்த படிகளில் அவர்களுக்கு ஆதரவளிப்போம்" எனவும் தெரிவித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் 60 நாட்களுக்கு அவர்களின் ஊதியம் மற்றும் பிற பலன்களைப் பெறுவார்கள். இதற்காக அவர்கள் வேலை வாய்ப்புக்கு ஆதரவு உள்ளிட்டபலன்களைக் கொடுக்கும் ஒரு பேக்கேஜ் கொடுக்கிறது. இதற்கு முன் அமேசான் நிறுவனம் நவம்பர் 2022 இல் முதல் சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்திருந்தது.

நவம்பர் 2022 முதல் ஜனவரி 2023 வரை சுமார் 18,000 பேரை அமேசான் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. மார்ச் மாத இறுதியில், 9,000 பேரை பணிநீக்கம் செய்தது. கிளவுட் கம்ப்யூட்டிங், மனித வளப்பிரிவு, விளம்பரப் பிரிவு மற்றும் ட்விட்ச் லைவ் ஸ்ட்ரீமிங் ஆகியவற்றில் இருந்தவர்கள் வேலை இழந்தனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் பின், அமேசான் ஸ்டுடியோவில் சுமார் 100 ஊழியர்கள் மற்றும் பிரைம் வீடியோவில் சுமார் 7,000 பணியாளர்கள் வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

அமேசான் மார்ச் 2022 இல் ஆம்ப் (Amp) என்ற நேரடி ரேடியோ செயலியை அறிமுகப்படுத்தியது. ஆனால், நிறுவனத்தின் செலவுக் குறைப்பு முயற்சிகளின்  ஒரு பகுதியாக, Amp ஐ மூடுவதாக சமீபத்தில் தெரிவித்தது. அமேசான் மியூசிக் (Amazon Music) துணைத் தலைவரான ஸ்டீவ் பூம், இத்தகவலை உறுதிசெய்தார்.

"இந்த முடிவு விரைவாகவோ அல்லது எளிதாகவோ எடுக்கப்படவில்லை" என்று பூம் குறிப்பிட்டார். "அமேசான் எதிர்காலத்திற்கான முதலீடுகள் குறித்து பல மாதங்கள் கவனமாக பரிசீலித்த பின்னரே இந்தத் தெளிவான முடிவை எடுத்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது! இந்திய விமானப் படைக்கு புகழாரம் சூட்டிய ஆனந்த் மஹிந்திரா

click me!