ஆதித்யா-எல்1 தொடர்ந்து முன்னேறி வருவதால், சில நாட்களில் மேக்னெட்டோ மீட்டர் (magnetometer) எனப்படும் காந்தமானி மீண்டும் இயக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஞாயிற்றுக்கிழமை ஆதித்யா எல்1 விண்கலத்தின் நிலை குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வழங்கியுள்ளது.
ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் இஸ்ரோ, ஆதித்யா-எல்1 ஆரோக்கியமாக இருப்பதாகவும், சூரியன்-பூமி இடையேயான L1 புள்ளியை நோக்கிச் செல்வதாகவும் தெரிவித்திருக்கிறது. அக்டோபர் 6ஆம் தேதி சுமார் 16 வினாடிகளுக்கு பாதை மாற்றத்துக்கான நடவடிக்கை செய்யப்பட்டது என்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
"அக்டோபர் 6, 2023 அன்று, சுமார் 16 வினாடிகளுக்கு உந்துவிசை வழங்கப்பட்டு பாதை மாற்றத்துக்கான பணிகள் செய்யப்பட்டன. செப்டம்பர் 19 அன்று டிரான்ஸ்-லெக்ரேஞ்சியன் புள்ளி (TL1I) டிராக் செய்யப்பட்ட நிலையில் பாதை மாற்றம் செய்வதற்கு தேவை ஏற்பட்டது" என இஸ்ரோ (ISRO) கூறியுள்ளது.
ககன்யான் திட்டத்துக்காக கடற்படையுடன் இணையும் இஸ்ரோ; அபார்ட் சோதனையை எப்படி நடக்கும்?
Aditya-L1 Mission:
The Spacecraft is healthy and on its way to Sun-Earth L1.
A Trajectory Correction Maneuvre (TCM), originally provisioned, was performed on October 6, 2023, for about 16 s. It was needed to correct the trajectory evaluated after tracking the Trans-Lagrangean…
— ISRO (@isro)
L1 புள்ளியைச் சுற்றி ஹாலோ பாதையில் விண்கலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதித்யா-எல்1 தொடர்ந்து முன்னேறி வருவதால், சில நாட்களில் மேக்னெட்டோ மீட்டர் (magnetometer) எனப்படும் காந்தமானி மீண்டும் இயக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சென்ற செப்டம்பர் 2ஆம் தேதி காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்கலம் பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளியில் இருந்து நிலைநிறுத்தப்பட்டு சூரியனைப்பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது.
லாக்ரேஞ்சியன் புள்ளி என்பது ஜோசப்-லூயிஸ் லாக்ரேஞ்ச் என்ற பிரெஞ்சு கணிதவியலாளரான ஜோசப்-லூயிஸ் லாக்ரேஞ்ச் நினைவாகப் பெயரிடப்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் இந்த லாக்ரேஞ்ச் புள்ளிகளை முதன்முதலில் ஆய்வு செய்த அவர் விண்வெளியில் சூரியன் மற்றும் பூமியின் ஈர்ப்பு விசைகள் சமநிலையில் இருக்கும் புள்ளிகளைக் கண்டறிந்தார். இந்தப் பகுதியில் விண்கலத்தை நிலைநிறுத்துவதன் மூலம் விண்கலம் இயங்கத் தேவையான எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கலாம்.
Pixel 8 Pro: பிக்சல் 8 ப்ரோ எப்படி இருக்கு? பிளஸ், மைனஸ் என்ன? விரிவான விவரம் இதோ