ககன்யான் திட்டத்துக்காக கடற்படையுடன் இணையும் இஸ்ரோ; அபார்ட் சோதனையை எப்படி நடக்கும்?

By SG Balan  |  First Published Oct 7, 2023, 4:21 PM IST

ககன்யான் திட்டத்தில் வீரர்கள் அமர்ந்து பயணிக்கும் க்ரூ மாட்யூல் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான அபார்ட் சோதனை விரைவில் நடைபெற உள்ளது.


ககன்யான் திட்டத்தின் சோதனைகளை விரைவில் தொடங்க உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சனிக்கிழமை தெரிவித்துள்ளது. மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணத் திட்டத்தில் முக்கியமான அபார்ட் சோதனை இம்மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளது.

விண்ணுக்கு அனுப்பப்படும் வீரர்கள் குழு விண்கலத்தில் இருந்து வெளியேறும் செயல்திறனை வெளிப்படுத்தும் டிவி-டி1 ((TV-D1) என்ற சோதனைக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று இஸ்ரோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

இஸ்ரேல், பாலஸ்தீனிய ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே மோதல்; மீண்டும் ஒரு யுத்தம்; இந்தியர்களுக்கு அறிவுரை!!

டிவி-டி1 (TV-D1) என்பது இந்த அபார்ட் மிஷனுக்காக உருவாக்கப்பட்ட ராக்கெட் ஆகும். க்ரூ மாட்யூல் மற்றும் க்ரூ எஸ்கேப் சிஸ்டம் ஆகிய பேலோடுகள் இதில் இருக்கும். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சோதனை மேற்கொள்ளப்படும்.

ககன்யான் பயணத்தின்போது விண்வெளி வீரர்கள் அமர்ந்திருக்கும் க்ரூ மாட்யூல் 17 கிமீ உயரத்தில் பிரியும். அப்போது அபார்ட் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு பாராசூட்டுகளுடன் க்ரூ மாட்யூல் கடலில் விழுந்துவிடும். அப்போது, இந்திய கடற்படையின் பிரத்யேக கப்பல் மற்றும் டைவிங் குழுவின் உதவியுடன் வங்காள விரிகுடாவில் க்ரூ மாட்யூல் மீட்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த அபார்ட் சோதனையானது ககன்யான் பணிக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வீரர்கள் அமர்ந்து பயணிக்கும் க்ரூ மாட்யூல் பாதுகாப்பில் இது முக்கிய அம்சமாகும்.

"க்ரூ மாட்யூலுடன் கூடிய இந்த சோதனை ககன்யான் திட்டத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும். இந்த சோதனையில் வெற்றி கிடைத்தால், இனிவரும் பயணங்களுக்கான சோதனைகளை இந்ம வழியில் மேற்கொள்ளலாம்" எனவும் இஸ்ரோவின் அறிக்கை கூறுகிறது.

புதிய தோற்றத்தில் ஏர் இந்தியா விமானம்! லோகா, டிசைன் எல்லாமே புதுசு!

click me!