Pixel 8 Pro: பிக்சல் 8 ப்ரோ எப்படி இருக்கு? பிளஸ், மைனஸ் என்ன? விரிவான விவரம் இதோ

By SG Balan  |  First Published Oct 7, 2023, 8:08 PM IST

பிக்சல் 8 ப்ரோ வடிவமைப்பில் பெரிய புதுமை இல்லாவிட்டாலும், ஹார்டுவேர் அம்சங்கள் சிறப்பாக இருக்கின்றன. கேமராவும் பல AI அம்சங்களைச் சேர்த்து மேம்படுத்தப்பட்டுள்ளது. கவர்ச்சிகரமான தள்ளுபடி விலையிலும் கிடைக்கிறது.


கூகுள் இந்த வாரம் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. கூகுள் பிக்சல் 8 ப்ரோ 12GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.1,06,999. சிறப்புச் சலுகை மூலம் இந்த மொபைலை ரூ.93,999 க்கு வாங்கலாம். அறிமுகச் சலுகையாக ரூ.13,000 வரை தள்ளுபடி கிடைக்கும். இதில் ரூ.9,000 வங்கி தள்ளுபடி மற்றும் ரூ.4,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும் அடங்கும்.

வடிவமைப்பு மற்றும் தோற்றம்

Tap to resize

Latest Videos

undefined

பிக்சல் 8 ப்ரோ மொபைலில் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் இருந்த வைசர் கேமரா வடிவமைப்பு தொடர்கிறது. பிக்சல் 8 ப்ரோவில் உள்ள வைசர் மூன்று கேமராக்களையும் கொண்டிருக்கும் நீளமான ஓவல் வடிவத்தைக் காணலாம். பானங்கள் அல்லது பிற பொருட்களின் வெப்பநிலை அளவீடுகளை அறிய பயன்படுத்தக்கூடிய புதிய வெப்பநிலை சென்சார் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தோற்றத்தில் ஏர் இந்தியா விமானம்! லோகா, டிசைன் எல்லாமே புதுசு!

பிக்சல் 8 ப்ரோ மொபைலின் விளிம்பு பகுதிகள் சற்று வளைந்திருக்கும். பிக்சல் 7 ப்ரோவுடன் ஒப்பிடும்போது அலுமினிய சட்டகம் சற்று தடிமனாக உள்ளது. பின்புற கண்ணாடி பேனல் ஒரு மேட் பூச்சு கொண்டிருக்கிறது. முன்பக்கத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் டிஸ்பிளே பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் தடுப்புக்கான IP68 மதிப்பீட்டையும் பெற்றிருக்கிறது.

இத்துடன் கூகிள் நுட்பமான அப்டேட்களையும் ஸ்கிரீனில் கொண்டு வந்துள்ளது. இது 'சூப்பர் ஆக்டுவா' டிஸ்ப்ளே என்று அழைக்கப்படுகிறது. இது 1344x2992 பிக்சல் அளவில் 489 ppi அடர்த்தி கொண்ட 6.7 இன்ச் LTPO OLED டிஸ்பிளே பேனல் உள்ளது. இது உண்மையில் பிக்சல் 7 ப்ரோவின் டிஸ்பிளே பேனலைவிட சுமாரானதுதான். பிச்சல் 7 ப்ரோவில் 1440x3120 பிக்சல் அளவில் 512 ppi அடர்த்தி உடைய LTPO OLED பேனல் உள்ளது.

சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்

பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 உடன் அறிமுகமாகியுள்ளது. கூகுள் 7 வருடம் சாப்ட்வேர் அப்டேட்டுக்கு உறுதியளிக்கிறது. அதில் OS அட்பேட்ட, பாதுகாப்பு இணைப்புகள் போன்ற அம்சங்கள் அடங்கும்.

பிக்சல் 8 ப்ரோ கூகுளின் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டென்சர் ஜி3 (Tensor G3) பிராசஸரில் இயக்கப்படுகிறது. இது செயற்கை நுண்ணறிவு சார்ந்த பணிகளைச் செய்வதற்கும் இயந்திர கற்றல் முறையில் இயங்குவதற்கும் மிகவும் திறமையான ஸ்மார்ட்போன் சிப் என்று கூறப்படுகிறது.

பிக்சல் 8 ப்ரோவில் கூகுள் கொண்டுவந்திருக்கும் பல புதிய AI அம்சங்களுக்கு இந்த சிப் தான் அடிப்படையானது. இத்துடன் கூகுள் பிக்சல் 8 ப்ரோவில் உள்ள டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்துகிறது.

இஸ்ரேல், பாலஸ்தீனிய ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே மோதல்; மீண்டும் ஒரு யுத்தம்; இந்தியர்களுக்கு அறிவுரை!!

கேமரா மற்றும் பேட்டரி

எதிர்பார்த்தபடி, புகைப்படம் எடுப்பதை சிறப்பாக்க கூகுள் கேமரா மற்றும் AI அம்சங்களில் கவனம் செலுத்தியிருக்கிறது. பரந்த f/1.68 அபார்சர், 82-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ (Field of View) கொண்ட வைட் ஆங்கிள் லென்ஸுடன் 50MP முதன்மை கேமரா சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆப்டிகல் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷனை உறுதிப்படுத்துகிறது.

ƒ/1.95 அபார்சர், 125.5 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ (Field of View) மற்றும் லென்ஸ் கரெக்ஷன் (Lens Correction) கொண்ட ஆட்டோ-ஃபோகஸ் (Auto Focus) 48MP குவாட் PD அல்ட்ராவைட் கேமரா உள்ளது. டெலிஃபோட்டோ கேமரா இப்போது 21.8 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ, 5x ஆப்டிகல் ஜூம் மற்றும் 30x சூப்பர் ஜூம் ஆகியவற்றை வழங்கும். ƒ/2.8 அபார்சருடன் 48MP சென்சார் பெறுகிறது. முன்புறத்தில் உள்ள 10.5MP கேமரா ƒ/2.2 அபார்சர் மற்றும் 95 டிகிரி அல்ட்ராவைடு ஃபீல்ட்-ஆஃப்-வியூவை வழங்குகிறது.

கேமராவில் பெஸ்ட் டேக், ஆடியோ மேஜிக், நைட் சைட், சூப்பர் ஜூம், மோஷன் ஆட்டோஃபோகஸ், மேஜிக் எடிட்டர் மற்றும் ஆஸ்ட்ரோஃபோட்டோகிராபி என பல AI அம்சங்கள் உள்ளன. பிக்சல் 8 ப்ரோ 5,050mAh பேட்டரியுடன் வருகிறது. இது பிக்சல் 7 ப்ரோவின் 5,000mAh பேட்டரியைப் போன்றது. பிக்சல் 8 ப்ரோ 30W வேகமான வயர்டு சார்ஜிங் மற்றும் 23W வயர்லெஸ் சார்ஜிங் வசதியைக் கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் பிக்சல் 8 ப்ரோ முந்தைய ஆண்டுகளில் வெளியான மாடல்களைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கலாம். ஆனால் அதன் ஹார்டுவேர் அம்சங்கள் இதை சிறப்பானதாக மாற்றுகின்றன. கூடுதலாக, கூகிள் கேமராவில் வசதியை பெரிதும் அதிகரித்துள்ளது. மொபைலில் சிறந்த படங்களைக் கொண்டுவர பல்வேறு AI அம்சங்களில் கவனம் செலுத்தியிருக்கிறது.

ககன்யான் திட்டத்துக்காக கடற்படையுடன் இணையும் இஸ்ரோ; அபார்ட் சோதனையை எப்படி நடக்கும்?

click me!