பட்ஜெட் ரேஞ்சில் ஸ்மார்ட்போன் வாங்கணுமா? பிளிப்கார்ட்டில் போகோ மொபைல்களுக்கு செம டீல்!

By SG Balan  |  First Published Oct 5, 2023, 2:53 PM IST

பிளிப்கார்ட் Big Billion Days தள்ளுபடி விற்பனையில் Poco மொபைல் போன்களுக்கு சிறப்புச் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது.


பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தில் பிக் பில்லியமன் டேஸ் (Big Billion Days) தள்ளுபடி விற்பனை அக்டோபர் 8ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தச் சலுகை விற்பனை நாட்களில் Poco நிறுவனத்தின் மொபைல்களுக்கு அதிரடி சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே Poco M5 , Poco M4 5G, Poco M6 Pro 5G ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. Poco X5 Pro 5G, Poco F5, Poco C55, Poco F5, Poco C50 ஆகிய மொபைல்களுக்கும் சலுகை அறிவிக்கப்பட உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

​Poco M5

போகோ எம்5 (​Poco M5) மொபைலில் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் உள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி9 (Mediatek Helio G9) ப்ராசஸருடன் 6.58 இன்ச் Full HD டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் மூன்று கேமராக்கள் (50MP + 2MP + 2MP) இருக்கின்றன. 5MP செல்ஃபி கேமராவும் உள்ளன. 18W வேகமான சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் தாக்குப்பிடிக்கும்.

கருப்பு, பச்சை மற்றும் மஞ்சள் என 3 நிறங்களில் கிடைக்கிறது. 4GB + 64GB, 4GB + 128GB, 6GB + 128GB என மூன்று ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்ட்களும் கிடைக்கின்றன. ரூ.8,499 க்கு வெளியான Poco M5 மொபைல் இப்போதைய சலுகையில் ரூ.6,999 விலையில் கிடைக்கிறது.

​Poco M4 5G

போகோ எம்5 (​Poco M5) மொபைலில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 (Mediatek Dimensity 700) ப்ராசஸருடன் 6.58 இன்ச் Full HD டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் டூயல் கேமரா (13MP + 2MP) தரப்பட்டுள்ளது. 5MP செல்ஃபி கேமரா இருக்கிறது. 18W வேகமான சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் தாக்குப்பிடிக்கும்.

கருப்பு, நீலம், மஞ்சள் என்ற மூன்று நிறங்களிலும் 4GB + 64GB மற்றும் 6GB + 128GB என இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்களிலும் இந்த மொபைலை வாங்கலாம். Poco M4 5G ஸ்மார்ட்போன் இப்போது ரூ.9,999 க்கு விற்பனையில் உள்ளது.

​Poco M6 Pro 5G

Poco M6 Pro 5G மொபைலில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Snapdragon 4 Gen 2) ப்ராசஸர், 6.79 இன்ச் FHD+ டிஸ்பிளே, 50MP + 2MP டூயல் கேமரா AI தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. செல்ஃபிக்கு 8MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரியில் 18W வேகமான சார்ஜிங் வசதி இருக்கிறது.

கருப்பு, பச்சை என இரண்டு வண்ணங்களில், 6GB + 128GB மற்றும் 8GB + 128GB வேரியண்ட்களில் கிடைக்கும் ​Poco M6 Pro 5G மொபைல் இப்போது, ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

click me!