OnePlus Diwali 2023 Sale: பண்டிகையைக் கொண்டாட அதிரடி ஆஃபர்! நம்பமுடியாத ஒன் பிளஸ் மொபைல்கள்!

By SG Balan  |  First Published Oct 3, 2023, 4:35 PM IST

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் தீபாவளி 2023 சேல் (OnePlus Diwali 2023 Sale) என்ற தீபாவளி சிறப்புத் தள்ளுபடிகளை வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளத்தில் பிக் பில்லியன் டேஸ் (Big Billion Days) தள்ளுபடி விற்பனை அக்டோபர் 8 முதல் 15 வரை நடைபெற உள்ளது. அமேசான் நிறுவனமும் இதேபோல 'கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்' (Great Indian Festival) விற்பனையை அக்டோபர் 8 முதல் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மொபைல் விற்பனையில் முன்னணியில் உள்ள ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் தீபாவளி 2023 சேல் (OnePlus Diwali 2023 Sale) என்ற தீபாவளி சிறப்புத் தள்ளுபடிகளை வெளியிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ மொபைல் ஆப் மூலம் வாங்கினால், 18 மாதங்கள் வரை தவணை முறையில் வாங்குவம் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. சில மாடல் மொபைல்களுக்கு இலவச பொருட்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

OnePlus 11 5G

ரூ.56,999 க்கு விற்கப்படும் ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) மொபைல் வங்கி சலுகைகளையும் பயன்படுத்தி வாங்கினால், ரூ.49,999 க்குக் கிடைக்கும். இதன் மூலம் 7 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும். கூப்பன் மூலம் ரூ.4000 கூடுதலாக சேமிக்கலாம். Buds Z2 TWS இயர்போன் இலவசமாகப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

இதேபோல வங்கி சலுகைகளையும் முழுமையாக பயன்படுத்திக்கொண்டால், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G) ரூ.17,499 க்கும், ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G) ஸ்மார்ட்போன் ரூ.28,999 க்கும், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G) ஸ்மார்ட்போன் ரூ.22,999 க்கும் வாங்க முடியும்.

OnePlus Buds Pro 2 TWS

இந்த வகையில், கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Buds Pro 2 TWS இயர்போன் ரூ.7,999 க்குக் கிடைக்கும். OnePlus Nord Buds 2 TWS இயர்பட்ஸ் ரூ.2,299 க்கு வாங்கலாம். வயர்டு இயர்போன்ஸ் வகையில் OnePlus Bullets Wireless Z2 விலை ரூ.1,349, OnePlus Nord Wired Earphone விலை ரூ.599 ஆக இருக்கும்.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட் ஒன்பிளஸ் பேட் ரூ.36,999 க்குக் கிடைக்கும். இதுமட்டுமின்றி OnePlus Pad Go என்ற புதிய டேப்லெட்டையும் அக்டோபர் 6 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், அதன் விலை முதலிய விவரங்கள் வெளியாகவில்லை.

ஸ்மார்ட்வாட்ச், ஸ்மார்ட் டிவி

ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச், ஸ்மார்ட் டிவி ஆகியவையும் வங்கிச் சலுகைகளுடன் மிகக் குறைவான விலையில் கிடைக்கிறது. OnePlus Nord Watch தீபாவளி சேலில் ரூ.4,999 க்குக் கிடைக்கும். OnePlus TV 65 Q2 Pro ஸ்மார்ட் டிவி ரூ.99,999 க்குப் பதிலாக ரூ.5000 தள்ளுபடியுடன் ரூ.94,999 க்குக் கிடைக்கும்.

click me!