ரெட்மீ நோட் 13 சீரிஸ் அறிமுகம்! நாள் முழுவதும் நீடிக்கும் பேட்டரியுடன் அசத்தலான மூன்று மாடல்கள்!

By SG Balan  |  First Published Sep 25, 2023, 10:11 AM IST

ரெட்மீ நோட் 13 மாடல்கள் வேகமான சார்ஜிங் வசதியுடன் நாள் முழுவதும் நீடித்து உழைக்கும் பேட்டரியைக் கொண்டிருக்கின்றன.


செப்டம்பர் 22, வியாழன் அன்று ரெட்மீ நோட் 13 சீரீஸ் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சீரிஸில் ரெட்மீ நோட் 13 (Redmi Note 13), ரெட்மீ நோட் 13 ப்ரோ (Redmi Note 13 Pro), ரெட்மீ நோட் 13 (Redmi Note 13 Pro+) ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் உள்ளன. இதற்கு முன் மூன்று மாடல்களுடன் வெளியிடப்பட்ட ரெட்மீ நோட் 12 மொபைலின் தொடர்ச்சியாக ரெட்மீ நோட் 13 வெளியாகியுள்ளது.

சீனாவில் சியோமி (Xiaomi) இணையதளத்தில் செப்டம்பர் 26 முதல் போன்களின் விற்பனை தொடங்கும். மூன்று நோட் 13 மாடல்களும் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் நீடித்து உழைக்கும் பேட்டரியைக் கொண்டிருக்கின்றன. வேகமாக சார்ஜ் செய்யும் வசதியும் இருக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

வாட்ஸ்அப் சேனலில் இணைந்தால் பிரைவசி பறிபோகுமா? புதிய அப்டேட்டில் என்ன இருக்கிறது?

Redmi Note 13

இந்திய ரூபாய் மதிப்பில் ரெட்மீ நோட் 13 6GB + 128GB மாடல் விலை சுமார் 13,900 ரூபாய் ஆகும். இதேபோல, 8GB + 128GB மற்றும் 8GB + 256GB மாடல்களும் முறையே ரூ. 15,100 மற்றும் ரூ.17,400 விலையில் விற்பனைக்கு வந்துள்ளன. 12GB + 256GB மாடலின் விலை ரூ.19,700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரெட்மீ நோட் 13 மாடல் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, MediaTek Dimensity 6080 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 இயங்குதளம் ஆகியவை இருக்கின்றன. பின்புறத்தில் உள்ள டபுள் கேமரா 100 மெகாபிக்சல் முதன்மை லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது. 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. 33W வேகமான சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

ஐபோன் 15 வாங்கப் போவதாக அறிவித்த எலான் மஸ்க்! காரணம் என்ன சொன்னார் தெரியுமா?

Redmi Note 13 Pro

ரெட்மீ நோட் 13 ப்ரோ மொபைலின் 8GB + 128GB மற்றும் 8GB + 256GB மாடல்கள் முறையே ரூ.17,400 மற்றும் ரூ.19,700 விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. 12GB + 256GB மாடல் ரூ. 22,000, 12GB + 512GB மாடல் ரூ.23,100 விலையில் உள்ளன. 16GB + 512GB மாடலின் விலை ரூ.24,300.

ப்ரோ மாடல் கருப்பு, நீலம், வெள்ளி மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும். ப்ரோ மாடலில் 6.67-இன்ச் 1.5K Full HD + AMOLED டிஸ்பிளே கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் உள்ளது. ஆண்டிராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் இருக்கிறது. பின்புற கேமராவில் 200-மெகாபிக்சல் சாம்சங் ISOCELL HP3 முதன்மை லென்ஸ், 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ், 2-மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆகியவை உள்ளன. 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 67W வேகமான சார்ஜிங் வசதியுடன் 5,100mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Redmi Note 13 Pro+

ரெட்மீ நோட் 13 ப்ரோ பிளஸ் மொபைல் 12GB + 256GB, 12GB + 512GB மற்றும் 16GB + 512GB ஆகிய மூன்று மாடல்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.22,800, ரூ.25,100, ரூ.26,200 ஆக உள்ளது.

ப்ரோ+ மாடல் கருப்பு, வெள்ளி மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது.  ப்ரோ+ மாடலில் உள்ள டிஸ்ப்ளே, இயங்குதளம், ஸ்டோரேஜ் மற்றும் கேமரா ஆகியவை ப்ரோ மாடலில் உள்ளதைப் போலவே உள்ளது. MediaTek Dimensity 7200 Ultra பிராசஸர் இருக்கிறது. 120W வேகமான சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது.

click me!