எதுவும் செய்யத் துணிந்த ஐபோன் பிரியர்கள்! மும்பை ஆப்பிள் ஸ்டோரில் மணிக்கணக்கில் அலைமோதிய கூட்டம்!

By SG Balan  |  First Published Sep 23, 2023, 8:00 PM IST

ஐபோன் பிரியர் ஒருவர் மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் 17 மணிநேரம் வரிசையில் காத்திருந்து ஐபோன் 15 மொபைலை வாங்கி இருக்கிறார். மற்றொருவர் பெங்களூருவில் இருந்து மும்பை சென்று புதிய ஐபோனை வாங்கியிருக்கிறார்.


இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப ஆர்வலர்கள் பலருக்கும் ஐபோன் தான் மிகவும் விருப்பமான மொபைல்போனாக உள்ளது. ஐபோன் மீது காதல் கொண்ட கேஜெட் பிரியர்கள் பலர் ஐபோன் 15 ஐ விற்பனைக்கு வந்த முதல் நாளே வாங்கும் ஆவலில் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்கள் முன்பு குவிந்தனர்.

மும்பையில் ஐபோன் ரசிகர் ஒருவர் புதிய ஆப்பிள் ஐபோனை வாங்குவதற்காகவே அகமதாபாத்தில் இருந்து மும்பை வரை வந்திருந்தார். மும்பையில் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள பிரத்யேக ஐபோன் கடை முன்பு 17 மணிநேரம் வரிசையில் காத்திருந்து தனக்கு மிகவும் பிடித்த ஐபோன் 15 மொபைலை வாங்கி இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

undefined

ஐபோன் கையில் கிடைத்த மகிழ்ச்சியுடன் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த அவர், "வியாழன் மதியம் 3 மணி முதல் நான் இங்கு காத்திருக்கிறேன். இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோரில் முதல் ஐபோனைப் பெற 17 மணிநேரம் வரிசையில் காத்திருந்தேன். நான் அகமதாபாத்தில் இருந்து வந்துள்ளேன்" என்று கூறினார்.

ஐபோன் 15 ரிலீஸ் ஆனதும் பழைய மாடல்களின் விலையைக் குறைத்த ஆப்பிள் நிறுவனம்!

"ஆப்பிள் ஸ்டோருக்கு வந்து என்னுடைய புதிய ஐபோன் 15 ப்ரோவைப் வாங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார் பெங்களூரைச் சேர்ந்த மற்றொரு ஐபோன் பிரியர் விவேக்.

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ஆப்பிள் சில்லறை விற்பனைக் கடைகளில் செப்டம்பர் 23 முதல் ஐபோன் 15 மொபைல் போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் கடையின் முன்பு நீண்ட வரிசைகள் காணப்பட்டன. ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் சிறந்த மொபைல் மாடல்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிளின் புதிய ஐபோன் 15 வரிசை, ஐபோன் 15 (iPhone 15),  ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus), ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro), ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) என நான்கு மாடல்களை உள்ளடக்கியது. வெள்ளிக்கிழமை முதல் இந்தியா உள்பட சுமார் 40 நாடுகளில் ஐபோன் 15 மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது.

14 ஆயிரம் ரூபாய் கம்மியா கிடைக்கும் ஐபோன் 15! எங்கே, எப்படி வாங்கலாம்? முழு விவரம் இதோ!

ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்கள் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் கிடைக்கின்றன. இளஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் கருப்பு என ஐந்து நிறங்களில் கிடைக்கின்றன.

128GB மெமரி ஸ்டோரேஜ் கொண்ட பேசிக் மாடல் ஐபோன் விலை ரூ.79,900. இதே ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 15 பிளஸ் விலை ரூ.89,900. 128GB மெமரி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 15 ப்ரோ ரூ.1,34,900 க்குக் கிடைக்கும். ஐபோன் ப்ரோ மேக்ஸ் மொபைல் குறைந்தபட்சமாக 256GB மெமரியுடன் ரூ.159,900 க்குக் விற்பனையில் உள்ளது.

AI அம்சங்களுடன் புதிய வீடியோ எடிட்டிங் ஆப்! அசத்தலான வசதிகளுடன் யூடியூப் கிரியேட் அறிமுகம்!

click me!