ஆப்பிள் விழாவில் புதிய ஐபோன் 15 இன்று வெளியீடு! தரமான மொபைல் தாறுமாறான விலையில்!

By SG BalanFirst Published Sep 12, 2023, 9:24 AM IST
Highlights

ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் உள்ள இந்த சிறப்பு அம்சங்கள் இருப்பதால் கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆப்பிள் தனது "வொண்டர்லஸ்ட்" வருடாந்திர நிகழ்வில் ஐபோன் 15 சீரீஸ் மொபைல் பற்றி அறிவிக்க உள்ளது. இந்த புதிய ஐபோன்கள் விரைவில் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது. வழக்கம் போல், ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு புதிய ஐபோன் மாடல்கள் வெளியாக உள்ளன.

​​ப்ரோ மாடல்கள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சற்று விலை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை ஆப்பிள் குறைவான விலையில் ஐபோன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில், இந்த விலை ஏற்றம் ஐபோன் வாங்க நினைக்கும் பட்ஜெட் மொபைல் பிரியர்களை ஏமாற்றம் அடைய வைப்பதாக உள்ளது.

பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு செப் 13ஆம் தேதி ஆரம்பம்!

பெரிய மாற்றங்கள்:

ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டு ப்ரோ மாடல்களும் டைட்டானியம் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டின் ஐபோன்களை விட சிறந்த அதிக பிரீமியம் உணர்வை லுக் கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் மற்றொரு பெரிய மாற்றம் புதிய பிராசஸராக இருக்கலாம். ப்ரோ மாடல்கள் தவிர மற்றவை மாடல்கள் ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் இருந்த A16 பயோனிக் பிராசஸருடன் வரக்கூடும். ப்ரோ மாடல்களில் A17 பயோனிக் பிராசஸர் மேம்பட்ட செயல்திறனை வழங்குவதுடன் நீண்ட பேட்டரி ஆயுளையும் கொடுக்கும்  என்று கூறப்படுகிறது.

ஏ.டி.எம். பின் நம்பர் மறந்துவிட்டதா? ஈசியாக புதிய பின் நம்பர் பெற இரண்டு வழிகள் இருக்கு!

நான்கு ஐபோன்களும் இந்த ஆண்டு USB-C போர்ட்டைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ப்ரோ மாடல்கள் மற்ற மாடல்களை விட வேகமான தரவு பரிமாற்ற வேகம் இருக்கும். ப்ரோ மாடல்களில் பல ஆண்டுகளாக டெலிஃபோட்டோ லென்ஸ்கள் உள்ளன. ஆனால் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இந்த ஆண்டு பெரிஸ்கோப் லென்ஸைக் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது.

அதிகரிக்கும் விலை:

ப்ரோ மாடல்களில் உள்ள இந்த சிறப்பு அம்சங்கள் இருப்பதால் தான் கூடுதல் விலையை நிர்ணயிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவை கடந்த ஆண்டைப் போல முறையே $799 மற்றும் $899 ஆரம்ப விலையில் கிடைக்கக்கூடும். இருப்பினும், ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் விலை சுமார் $100 முதல் $200 வரை அதிகரிக்கலாம்.

ஐபோன் 15 ப்ரோ கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 14 ப்ரோவை விட $100 அதிகமாக, $1,099 விலையைக் கொண்டிருக்கலாம். ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸை விட $200 விலை அதிகரித்து, $1,199 விலையில் இருக்கலாம்.

சந்திரயானுக்குப் பிறகு சமுத்திரயான்! ஆழ்கடலை ஆய்வு செய்யும் திட்டத்துடன் இந்திய விஞ்ஞானிகள்!

click me!