
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் சியோமியின் துணை பிராண்டான ரெட்மி மே மாதம் A2+ பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் HD+ டிஸ்ப்ளே மற்றும் மீடியாடெக் சிப்செட் கொண்டது. அறிமுகத்தின் போது, ரெட்மி ஏ2+ ஸ்மார்ட்போனை 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட ஒரே மாடல் தான் வழங்கப்பட்டது. அதன் விலை ரூ.8,499.
இப்போது அதே ஸ்மார்ட்போனின் புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அதிக ஸ்டோரேஜ் கிடைக்கிறது. அதே 4GB ரேம் கொண்ட இந்த புதிய மாடலில் 128GB ஸ்டோரேஜ் கொடுக்கப்படுகிறது. Redmi A2+ ஸ்மார்ட்போனின் இந்த புதிய வேரியண்ட் பற்றி ரெட்மி நிறுவனம் ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளது.
அதிகரித்த ஸ்டோரேஜ் தவிர, மற்ற அம்சங்கள் முந்தைய மாடலைப் போலவே உள்ளது. ஆச்சரியம் அளிக்கும் வகையில், Redmi A2+ புதிய மாடல் மொபைலும் முந்தைய மாடலைப் போல ரூ.8,499 விலையில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த மொபைலை Amazon, MI.com மற்றும் Xiaomi கடைகளில் வாங்கலாம்.
ஐபோனை சார்ஜ் போட்டுவிட்டு பக்கத்திலேயே தூங்காதீங்க! ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை!
Redmi A2+: முக்கிய அம்சங்கள்
Redmi A2+ 720x1600 பிக்சல் தெளிவுத்திறன் கொண்ட 6.52-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசெஸர், 4GB ரேம் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஸ்டோரேஜ் 64GB மற்றும் 128GB ஆகிய இரண்டு விதமாகக் கிடைக்கிறது. பயனர்கள் மெமரி கார்டு மூலம் ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை விரிவாக்கவும் முடியும்.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 (Android 13 Go) இயங்குதளத்தில் செயல்படக்கூடியது. இரண்டு சிம், 8MP பின்பக்க கேமரா, செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5MP முன்பக்க கேமரா ஆகியவையும் உள்ளன. நீடித்து நிற்கும் 5000mAh பேட்டரியும் இருக்கிறது. ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சாரும் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
Realme 11X 5G: இதுதான் நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த 5G ஸ்டார்ட்போன்... கவர்ச்சிகரமான அறிமுகச் சலுகை!