Realme 11X 5G: இதுதான் நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த 5G ஸ்டார்ட்போன்... கவர்ச்சிகரமான அறிமுகச் சலுகை!

By SG Balan  |  First Published Aug 22, 2023, 10:15 PM IST

Realme 11X மொபைல் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசெஸருடன் வருகிறது. இந்த 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். ஒன்றில் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் இருக்கும். இன்னொரு வேரியண்டில் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் இருக்கும்.


ரியல்மீ (Realme) நிறுவனம் Realme 11X 5G ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. உடனே, ஸ்மார்ட்போன் பிரியர்கள் பலர் ஆர்வமுடன் இதனை வாங்க தயாராகியுள்ளனர். இந்நிலையில், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அறிமுகச் சலுகையை ரியல்மீ நிறுவனம் அறிவித்துள்ளது.

Realme 11X 5G சிறப்பு அம்சங்கள்:

Tap to resize

Latest Videos

undefined

Realme 11X 5G மொபைலில் 2x சென்சார் ஜூம் கொண்ட 64MP பின்புற கேமரா இருக்கும். கூர்மையான மற்றும் விரிவான ஜூம் வசதிகளைக் கொண்டிருக்கும். 33W வேகமான சார்ஜிங் அம்சத்துடன் 5000 mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். மொபைலை 50% வரை சார்ஜ் செய்ய 29 நிமிடங்கள் போதும்.

Realme 11X மொபைல் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசெஸருடன் வருகிறது. இந்த 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். ஒன்றில் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் இருக்கும். இன்னொரு வேரியண்டில் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் இருக்கும்.

ஆபாசத்தைத் தடுக்க புதிய ஆயுதம்! சமூக ஊடகங்கள், வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு மத்திய அரசின் கிடுக்கிப்பிடி!

Realme 11X  அறிமுகச் சலுகை:

Realme 11X 5G ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 23ஆம் தேதி அறிமுகமாவதால், அன்றைய தினம் மாலை 6 மணி முதல் 8 மணி வரை Realme.com மற்றும் Flipkart இணையதளங்களில் அறிமுகச் சலுகை வழங்க ரியல்மீ நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அறிமுகச் சலுகையை பயன்படுத்தி 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட Realme 11X 5G மொபைலுக்கு ரூ.1,000 வரை தள்ளுபடி பெறலாம். இத்துடன் வாடிக்கையாளர்கள் 3 மாதங்களுக்கு வட்டி இல்லாத EMI முறையில் வாங்கும் வசதியும் உள்ளது.

8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட Realme 11X 5G மொபைலை வாங்கினால், ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா தவணை முறையில் (No Cost EMI) வாங்க முடியும்.

போலி செய்திகளைத் தடுக்க தனிப் பிரிவு! பச்சைக் கொடி காட்டிய கர்நாடக முதல்வர் சித்தராமையா!

click me!