வேற மாதிரி ஸ்டைலில் புதிய ஜியோ ஸ்மார்ட்போன்கள்! AI கேமரா மூலம் செம குவாலிட்டி போட்டோஸ் கேரண்டி!

By SG Balan  |  First Published Aug 13, 2023, 11:02 AM IST

BIS இணையதளத்தில் இந்த ஜியோ போன்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்படி, இரண்டு மொபைல்களும் JBV161W1 மற்றும் JBV162W1 ஆகிய மாடல் எண்களைக் கொண்டவை.


ரிலையன்ஸ் நிறுவனம் விரைவில் இரண்டு ஜியோ ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவை மொபைல் தரநிர்ணய நிறுவனத்தின் (BIS) இணையதளத்தில் சான்றிதழ் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

ரிலையன்ஸ் தனது வருடாந்திர பொதுக் கூட்டத்தை ஆகஸ்ட் 28 அன்று நடத்த உள்ளது. இந்நிகழ்வின் போது ஜியோ போன்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4G RAM மற்றும் 32GB இன்டர்னல் மெமரியுடன் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் ஆகியவை இந்த புதிய ஜியோ ஸ்மார்ட்போன்ககளில் இருக்கலாம்.

Latest Videos

undefined

BIS இணையதளத்தில் இந்த ஜியோ போன்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்படி, இரண்டு மொபைல்களும் JBV161W1 மற்றும் JBV162W1 ஆகிய மாடல் எண்களைக் கொண்டவை. ஆகஸ்ட் 11ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்த மொபைல்கள் BIS ஒப்புதல்  சான்று பெற்றுள்ளன. மாடல் எண்ணைத் தவிர, ஸ்மார்ட்போன்களின் எந்த விவரங்களும் காணப்படவில்லை.

சந்திரயான்-3 எடுத்த நிலவின் குளோஸ்-அப் தோற்றம்! இஸ்ரோ வெளியிட்ட பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்!

வரவிருக்கும் மொபைல்கள் 5G மொபைல்களாக இருக்கும். 32GB மெமரியுடன் மற்றும் 13 மெகாபிக்சல் டூயல் ரியர் AI கேமராவும், 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இருக்கும் என்று தெரிகிறது. ஆண்டிராய்டு 12 இயங்குதளம், 6.5-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே. 18W வேகமான சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரியும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ போன்கள் அறிமுகம் குறித்த எந்த தகவலையும் இதுவரை அறிவிக்கவில்லை. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது 46வது ஆண்டுக் கூட்டத்தை ஆகஸ்ட் 28 அன்று மதியம் 2:00 மணிக்குத் தொடங்குகிறது. இந்த நிகழ்வின்போது ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி ஜியோ போன்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ போன்கள் பற்றி சமீப காலமாகவே செய்திகள் பரவி வருகின்றன. Jio LS1654QB5 என்ற மாடல் எண் கொண்ட ஜியோ ஃபோன் கடந்த ஆண்டு ஸ்னாப்டிராகன் 480+ பிராசெஸர் உடன் அட்ரினோ 619 GPU மற்றும் 4GB RAM உடன் வெளியானது.

செவ்வாய் கிரகத்தின் கேல் பள்ளத்தில் தண்ணீர் இருந்திருக்கும்... நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ஆதாரம்!

click me!