சியோமி மிக்ஸ் போல்ட் 3 ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்! லைகா-டியூன் கேமரா தான் ஹைலைட்!

Published : Jul 27, 2023, 05:35 PM ISTUpdated : Jul 27, 2023, 05:39 PM IST
சியோமி மிக்ஸ் போல்ட் 3 ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்! லைகா-டியூன் கேமரா தான் ஹைலைட்!

சுருக்கம்

ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள சியோமி மிக்ஸ் ஃபோல்ட் 3 அதன் பின்புற குவாட் கேமராவுடன் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது.

சியோமி மிக்ஸ் போல்டு 3 (Xiaomi Mix Fold 3) மொபைல் போன் விரைவில் அறிமுகம் செய்யப்படுவதை சியோமி நிறுவனம் உறுதி செய்துள்ளது. சியோமி நிறுவனர் மற்றும் சிஇஓ லெய் ஜுன், லைகா-டியூன் கேமராக்களுடன் மடிக்கக்கூடிய வசதியுடன் விரைவில் சியோமி மிக்ஸ் போல்டு 3 வெளியாகும் என்று கூறியிருக்கிறார்.

சியோமி மிக்ஸ் போல்டு 2 கடந்த ஆகஸ்ட் 2022 இல் வெளியான நிலையில், அதேபோல வரும் ஆகஸ்ட் மாதம் சியோமி மிக்ஸ் போல்டு 3 வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 பிராசெசர் மற்றும் 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,500mAh பேட்டரியுடன் வெளியிடப்பட்ட சியோமி மிக்ஸ் போல்டு 2 (Xiaomi Mix Fold 2) மொபைலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

சாம்சங் மட்டும் தான் சம்பவம் பண்ணுமா? நாங்களும் இருக்கோம்! வருகிறது OnePlus-ன் பிரீமியம் ஸ்மார்ட்போன்

வரவிருக்கும் புதிய மொபைல் புத்தகம் போல மடிக்கக்கூடிய வசதியுடன், முந்தைய மாடலை விட மிகவும் கச்சிதமான வடிவமைப்புடன் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி நிறுவனர் ஜுன் இதுகுறித்து பதிவு செய்த ட்வீட்டில், மிக்ஸ் ஃபோல்ட் 3 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார். இந்த மொபைலில் உள்ள லைகா-டியூன் செய்யப்பட்ட கேமராக்கள் மொபைல் கேரமா தொழில்நுட்பத்தில் திருப்புமுனையாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

கேமராக்களில் ஓ.ஐ.எஸ். (OIS)  எனப்படும் மைக்ரோ ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மோட்டார்கள் மற்றும் அல்ட்ரா-ஸ்லிம் உயர் ஒளிவிலகல் லென்ஸ்கள் இருக்கும். ஜுன்னின் ட்விட்டர் பதிவில் இடம்பெற்றுள்ள விளம்பரப் படத்தில், ஸ்மார்ட்போனின் படமும் இடம்பெற்றது. சியோமி மிக்ஸ் ஃபோல்ட் 3 அதன் பின்புற குவாட் கேமராவுடன் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது.

சியோமி மிக்ஸ் ஃபோல்ட் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும், இன்னும் சரியான தேதியை முடிவு செய்யவில்லை என்று தெரிகிறது.

நாய்க்கடி விபரீதம்... 40 பேரைக் கடித்துவிட்டு உயிரை விட்ட இரண்டரை வயது சிறுமி... அதிர்ச்சியில் கிராம மக்கள்

PREV
click me!

Recommended Stories

இந்தியர்களுக்கு அதிரடி சரவெடி ஆஃபர் வழங்கிய அம்பானி.. ரூ.799க்கு அசத்தலான போன்
ஆஹா.. இப்படி ஒரு ஆஃபரா..! இனி வீட்டுக்கு வீடு BSNL தான்.. 11 மாதத்திற்கான அட்டகாசமான பிளான்