சாம்சாங் S23 FE மொபைல் ரிலீஸ் எப்போது? ஆவலைத் தூண்டும் அட்டகாசமான அம்சங்கள்!

By SG Balan  |  First Published Aug 24, 2023, 6:22 PM IST

சாம்சங்கின் அதிகாரபூர்வ அறிவிப்புக்குப் பின்புதான் Samsung Galaxy S23 FEமொபைலின் வெளியீட்டு தேதி, விலை முதலிய விவரங்கள் தெரியவரும்.


தென் கொரிய நிறுவன சாம்சங்கிற்கு 2023ஆம் ஆண்டு இதுவரை நல்ல ஆண்டாக உள்ளது. புதிதாக அறிமுகப்படுத்திய மொபைல் போன்கள் பயனர்களின் பாராட்டைப் பெற்றுள்ளன. பிப்ரவரியில், கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா உட்பட அதன் எஸ் 23 சீரீஸ் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியது. அது 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்று பாராட்டு பெற்றுள்ளது.

சாம்சங் நிறுவனம் அதன் மடிப்பு மொபைல்களான கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 மற்றும் ஃபிளிப் 5 ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மற்றொரு சாம்சங் ஸ்மார்ட்போன் - Galaxy S23 FE குறித்த வதந்திகள் பரவத் தொடங்கின. இருப்பினும் அது வெளியாவது எப்போது என்று உறுதிப்படுத்தப்படவில்லை.

Tap to resize

Latest Videos

undefined

இப்போது இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் வெளிவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்பத் தகவல்களை லீக் செய்துவரும் யோகேஷ் ப்ரார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றிப் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் இருந்து, புதிய Samsung Galaxy S23 FE ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.

Redmi A2+ மொபைலின் புதிய 128 GB மாடல் வந்தாச்சு! விலையைக் கேட்டா ஆச்சரியமா இருக்கும்!

Samsung Galaxy S23 FE

- 6.4" FHD+ Dynamic AMOLED, 120Hz
- Qualcomm Snapdragon 8 Gen 1 / Exynos 2200
- 50MP (OIS) + 8MP + 12MP (Tele)
- Selfie: 10MP
- Android 13, One UI 5.1
- 4,500mAh battery, 25W Charging
- 4+5 years support
- wireless charging, IP rating

September release

— Yogesh Brar (@heyitsyogesh)

தென்னாப்பிரிக்காவின் சாம்சங் மொபைல் நிறுவன துணைத் தலைவர் ஜஸ்டின் ஹியூம் ஒரு நேர்காணலில் இந்த ஸ்மார்ட்போன் சீக்கிரம் வெளியாகும் என்று கூறியதை இந்தத் தகவல் மேலும் உறுதிப்படுத்துகிறது.

சாம்சங் கேலக்ஸி எஃப்.ஈ. (Samsung Galaxy S23 FE) ஸ்மார்ட்போனோ் 6.4-இன்ச் FHD+ டைனமிக் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கக்கூடும். வெவ்வேறு பிராசெஸர்களுடன் கூடிய இரண்டு மாடல்களை சாம்சங் வழங்க உள்ளது. ஸ்னாப்டிராகன் (Snapdragon 8 Gen 1) மற்றும் எக்ஸினோஸ் (Exynos 2200 SoC) மூலம் பிராசெஸர்கள் இருக்கும்என்று தெரிகிறது.\

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் இயங்கும் இந்த மொபைல், 8MP அல்ட்ரா வைடு மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய 50MP பின்புற கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. முன்பக்கத்தில் 10MP செல்ஃபி கேமரா இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் 4,500mAh பேட்டரியுடன் 25W வேகமான சார்ஜிங் வசதியுடன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால், இந்த அனைத்து தகவல்களும் அதிகாரபூர்வமான தகவல்கள் அல்ல. சாம்சங் இந்த மொபைல் பற்றி எதுவும் இதுவரை கூறவில்லை. சாம்சங்கின் அதிகாரபூர்வ அறிவிப்புக்குப் பின்புதான் மொபைலின் வெளியீட்டு தேதி, விலை முதலிய விவரங்கள் தெரியவரும்.

ஐபோனை சார்ஜ் போட்டுவிட்டு பக்கத்திலேயே தூங்காதீங்க! ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை!

click me!