
ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் மொபைல்கள் வெளியாகிவிட்டன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஐபோன்களை செப்டம்பர் 15 முதல் முன்பதிவு செய்யலாம். செப்டம்பர் 22 முதல் இந்த ஐபோன்கள் கடைகளில் கிடைக்கும். இந்த மொபைல்கள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு வருகின்றன. இந்தியா, ஹாங்காங், துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளில் விலையில் பெரிய வித்தியாசம் காணப்படுகிறது.
ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய ப்ரோ மாடல்களின் விலையில் இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஆப்பிள் ஐபோன் 15 விலை கடந்த ஆண்டு மாடலைவிட ரூ.5,000 அதிகமாக உள்ளது. பேசிக் மாடலான ஐபோன் 15 இந்தியாவில் 79,990 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதன் விலை 799 டாலர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 66,315. இந்தியாவில் கிட்டத்தட்ட 14 ஆயிரம் ரூபாய் அதிகமான விலையில் விற்கப்படுகிறது.
ஐபோன் 15 சீரிஸில் USB-C சார்ஜிங் வந்தது ஏன்? ஐரோப்பிய யூனியன் போட்ட கறாரான கன்டிஷன் தான் காரணமாம்!
ஐபோன் ப்ரோ மேக்ஸ் விலை கடந்த ஆண்டைவிட ரூ.20,000 அதிகமாக உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ப்ரோ மேக்ஸ் மொபைலில் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்குப் பதிலாக 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் தான் பேசிக் மாடலாக உள்ளது. எனவே, விலை வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் இரு மடங்கு ஸ்டோரேஜ் கிடைக்கிறது.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அனைத்து ஐபோன் மாடல்களுக்கான விலையை கீழே உள்ள அட்டவணை மூலம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால், சில பிராந்தியங்களில் விலையுடன் கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
| ஐபோன் மாடல் | ஸ்டோரேஜ் | இந்தியா | பிரிட்டன் | அமெரிக்கா | சிங்கப்பூர் |
| ஐபோன் 15 | 128GB | ₹79,900.00 | £799 ≈ ரூ.82,097 | $799 = ரூ.66,315 | S$1,299 = ரூ.79,217 |
| 256GB | ₹89,900.00 | £899 ≈ ரூ.92,597 | $899 = ரூ.74,654 | S$1,459 = ரூ.88,798 | |
| 512GB | ₹109,900.00 | £1,099 ≈ ரூ.113,197 | $1,099 = ரூ.91,244 | S$1,779 = ரூ.108,521 | |
| ஐபோன் 15 பிளஸ் | 128GB | ₹89,900.00 | £899 ≈ ரூ.92,597 | $899 = ரூ.74,654 | S$1,449 = ரூ.88,448 |
| 256GB | ₹99,900.00 | £999 ≈ ரூ.102,897 | $999 = ரூ.82,866 | S$1,609 = ரூ.98,118 | |
| 512GB | ₹119,900.00 | £1,199 ≈ ரூ.123,497 | $1,199 = ரூ.99,458 | S$1,929 = ரூ.117,682 | |
| ஐபோன் 15 ப்ரோ | 128GB | ₹134,900.00 | £999 ≈ ரூ.102,897 | $999 = ரூ.82,866 | S$1,649 = ரூ.100,552 |
| 256GB | ₹144,900.00 | £1,099 ≈ ரூ.113,197 | $1,099 = ரூ.91,244 | S$1,800 = ரூ.109,710 | |
| 512GB | ₹164,900.00 | £1,299 ≈ ரூ.133,797 | $1,299 = ரூ.107,836 | S$2,129 = ரூ.129,880 | |
| 1TB | ₹194,900.00 | £1,499 ≈ ரூ.154,397 | $1,499 = ரூ.124,428 | S$2,449 = ரூ.149,750 | |
| ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் | 256GB | ₹159,900.00 | £1,199 ≈ ரூ.123,497 | $1,199 = ரூ.99,458 | S$1,999 = ரூ.122,835 |
| 512GB | ₹179,900.00 | £1,399 ≈ ரூ.144,097 | $1,399 = ரூ.115,050 | S$2,319 = ரூ.141,406 | |
| 1TB | ₹209,900.00 | £1,599 ≈ ரூ.164,697 | $1,599 = ரூ.131,642 | S$2,639 = ரூ.160,977 |