கூகுள் பிக்சல் 8 மொபைல் இன்று ரிலீஸ்; ட்ரெண்டை மாற்றப்போகும் வெப்பநிலை சென்சார்!

By SG Balan  |  First Published Oct 4, 2023, 9:23 AM IST

இரண்டு பிக்சல் 8 மாடல்களும் வேகமான சார்ஜிங் திறன்கள், Qi வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீடுகளுடன் வரும் என்றும் கேஜெட் பிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


கூகுள் பிக்சல் 8 (Pixel 8) மற்றும் பிக்சல் 8 ப்ரோ (Pixel 8 Pro) ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஃப்ளிப்கார்ட்டில் பிக்சல் போன்களுக்கான முன்பதிவு அக்டோபர் 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது. எனவே பிக்சல் 8 சீரிஸ் மொபைல்களை வாங்க விரும்புவோர் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ப்ரோ மாடலில் 6.7 இன்ச் QHD+ OLED டிஸ்ப்ளே இடம்பெறலாம் என்று தெரிகிறது. முந்தைய ஆண்டின் மாடல்களைப் போலவே, கண்ணாடி மற்றும் உலோகத்தை இணைத்த வடிவமைப்பு இந்த ஆண்டிலும் இருக்க வாய்ப்புள்ளது. முன்பக்கத்தில், ஒரு பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் காணலாம்.

Latest Videos

undefined

பிக்சல் 8 ப்ரோ வெப்பநிலை கண்காணிப்பு சென்சார் மற்றும் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ப்ரோ மாடலில் வெப்பநிலை கண்காணிப்பு சென்சார் சிறப்பாக செயல்பட்டால், இனி வரும் போன்களில் இந்த அம்சம் தவிர்க்க முடியாததாக மாறக்கூடும்.

OnePlus Diwali 2023 Sale: பண்டிகையைக் கொண்டாட அதிரடி ஆஃபர்! நம்பமுடியாத ஒன் பிளஸ் மொபைல்கள்!

பிக்சல் 8 பேசிக் மாடலில் 24W வேகமான வயர்டு சார்ஜிங் வசதியுடன் 4,485mAh பேட்டரி இருக்கலாம். அதேசமயம் பிக்சல் 8 ப்ரோவில் 27W வேகமான வயர்டு சார்ஜிங் வசதி கொண்ட 4,4950mAh பேட்டரி இருக்கக்கூடும். கூகுள் நிறுவனம் நீண்ட காலத்திற்கு முன்பே மொபைலுடன் சார்ஜரையும் சேர்த்து வழங்குவதை நிறுத்திவிட்டதால், மொபைலுடன் சார்ஜரும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஆகியவை ஏழு வருட மென்பொருள் ஆதரவுடன் வரும் என்று சொல்லப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு இணைப்புகள் மற்றும் முக்கிய ஆண்ட்ராய்டு OS அப்டேட்டுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்சல் 8 மற்றும் 8 ப்ரோ புதிய டென்சர் ஜி3 பிராசஸர் மூலம் இயக்கப்படும். பிக்சல் 8 இல் 8GB RAM, பிக்சல் 8 ப்ரோவில் 12GB RAM இருக்கலாம். அமெரிக்காவில் பிக்சல் 8க்கு 256GB வரையிலும், பிக்சல் 8 ப்ரோவிற்கு 1TB வரையிலும் ஸ்டோரேஜ் கொடுக்கப்படுகிறது.

இரண்டு பிக்சல் 8 மாடல்களும் வேகமான சார்ஜிங் திறன்கள், Qi வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீடுகளுடன் வரும் என்றும் கேஜெட் பிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

டேப்லெட் மார்க்கெட்டை டார்கெட் செய்யும் சாம்சங்! கேலக்ஸி டேப் A9 விரைவில் அறிமுகம்!

5G வசதி கொண்ட கூகிளின் புதிய பிரீமியம் போன்கள் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டிருக்கும். பிக்சல் 8  சீரீஸ் மொபைல்களை வாங்குபவர்கள் புதிய ஆபரேடிங் சிஸ்டம் எப்படி இருக்கின்றது என்று முதலில் பயன்படுத்திப் பார்க்க முடியும்.

அமெரிக்காவில் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஆகியவை முறையே 699 டாலர் மற்றும் 999 டாலர் விலை கூறப்படுகிறது. இதன்படி, இந்தியாவில் பிக்சல் 8 சீரிஸ் மொபைல்களின் விலை முறையே ரூ.58,000 மற்றும் ரூ.82,900 ஆக இருக்கும். ஆனால், இந்தியாவில் விதிக்கப்படும் சுங்கம் உள்ளிட்ட பிற கட்டணங்கள் காரணமாக விலை சற்று அதிகமாக இருக்கும். பிக்சல் 8 விலை ரூ.65,000 முதல் ரூ.70,000 வரை இருக்கலாம். பிக்சல் 8 ப்ரோ ரூ.90,000 முதல் ரூ.95,000 வரை விலையில் கிடைக்கலாம்.

இந்தியாவில், பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ விற்பனை ஃப்ளிப்கார்ட் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், கடைகளில் இந்த போன்களின் விற்பனை எப்போது தொடங்கும் என அறிவிக்கப்படவில்லை.

click me!