போலி ஆவணம் சமர்ப்பித்து தேர்தல் பணிமனை திறந்ததாக பாஜக பெண் நிர்வாகி மீனாட்சி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும், நாடு முழுவதும் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடத்தப்படவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது.
நான் மாம்பழம் பற்றி பேசினேன்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கிண்டல்!
தேர்தல் முறைகேடுகளை தவிர்க்க தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், போலி ஆவணம் சமர்ப்பித்து தேர்தல் பணிமனை திறந்ததாக பாஜக பெண் நிர்வாகி மீனாட்சி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வில்லிவாக்கத்தில் போலி ஆவணம் சமர்ப்பித்து தேர்தல் பணிமனை திறந்த பா.ஜ.க. பெண் நிர்வாகி மீனாட்சியை சென்னை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலத்தில் வீட்டின் உரிமையாளர் பெயரில் போலி ஆவணம் கொடுத்து தேர்தல் பணிமனை திறந்துள்ளார். பெண் நிர்வாகி கைதை தொடர்ந்து பா.ஜ.க. மண்டல தலைவர் மருதுபாண்டி வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.