கோடை விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோடைக்கால விடுமுறையை ஒட்டி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கோடை விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: என் வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை.. திட்டவட்டமாக மறுக்கும் திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு!
நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் (06070) ஏப்ரல் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஆகிய வியாழக்கிழமைகளில் நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் (06069) ஏப்ரல் 12, 19, 26, மே 3, 10, 17, 24, 31 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் நெல்லையில் இருந்து மாலை 3.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நெல்லை சென்று சேரும்.
இதையும் படிங்க: Heat Wave : கொளுத்த போகுது வெயில்..குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் வெளியே செல்ல வேண்டாம்- தமிழக அரசு
இந்த ரயில் சென்னையில் இருந்து நெல்லைக்கு சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, திருவாரூர், சிதம்பரம் விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 1 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.