அமைச்சர் உதயநிதியின் வலது கரமான சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

By vinoth kumar  |  First Published Apr 9, 2024, 9:05 AM IST

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 


அமைச்சர் உதயநிதியின் வலது கரமாக அறியப்படும் சென்னை மேற்கு மாவட்ட திமுக  செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளரும் திரைப்பட தயாரிப்பளருமான ஜாபர் சாதிக் முக்கிய நபராக  செயல்பட்டு வந்தார். இதனையடுத்து அவர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் என்சிபி அதிகாரிகள் கடந்த மாதம் 9ம் தேதி ஜெப்பூரில் கைது செய்தனர். 

Latest Videos

undefined

இதையும் படிங்க: களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை.. ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் வீடுகளில் சோதனை.. அடுத்து சிக்கப்போகுவது யார்?

ஜாபர் ஜாதிக் தயாரித்த இறைவன் மிகப்பெரியவன் படத்தை அமீர் இயக்கிருந்தார். இதையடுத்து போதைப்பொருள் வழக்கில் ஆஜராக இயக்குநர் அமீருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு சம்மன் அனுப்பியதை அடுத்து ஏப்ரல் 2ம் தேதி டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அமீர் ஆஜரானார். அப்போது ஜாபர் சாதிக் குறித்து அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. 

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் நிர்வாகியான  ஜாபர் சாதிக்கின் சென்னை மயிலாப்பூர் அருளானந்தம் தெருவில் உள்ள வீடு  மற்றும் அலுவலகங்கள் மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள ஜேஎம்எஸ் ரெசிடென்சி என்ற ஓட்டலில் காலை 7 மணி முதல் மூன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க:  60வது திருமண நாளுக்காக திருக்கடையூர் சென்று திரும்பிய போது கார் - அரசு பேருந்து மோதல்.. 5 பேர் உயிரிழப்பு!

அதேபோல், சென்னை தியாகராய நகரில் உள்ள இயக்குநர் அமீரின் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்ட 6 அமலாக்கத்துறை அதிகாரிகளில் 2 அதிகாரிகள் சில ஆவணங்களுடன் புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் அமைச்சர் உதயநிதியின் வலது கரமாக அனைவராலும் அறியப்படும் சென்னை மேற்கு மாவட்ட திமுக  செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு   வருகின்றனர். சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

click me!