ஆசையுடன் குழந்தையை கொடுத்த நிர்வாகி; தமிழச்சி என பெயர் சூட்டி மகிழ்ந்த கனிமொழி

By Velmurugan s  |  First Published Apr 8, 2024, 7:47 PM IST

தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கனிமொழி, திமுக நிர்வாகி ஒருவரின் குழந்தைக்கு தமிழச்சி என பெயர் சூட்டி மகிழ்ந்தார்.


தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. முக்கிய தலைவர்கள் பலரும் நாள் ஒன்றுக்கு சுமார் 3 முதல் 5 தொகுதிகள் வரை சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப்பொதுச் செயலாளருமான கனிமொழி இன்று தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

வடலூர் வள்ளலார் ஞான சபையில் சர்வதேச மையம் அமைக்க கடும் எதிர்ப்பு; தீடீ போராட்டத்தால் தொடர் பதற்றம்

Tap to resize

Latest Videos

undefined

அந்த வகையில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கண்ணகி நகரில் பொதுமக்களிடம் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பரப்புரையில் ஈடுபட்ட போது, தங்களின் குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும் என திமுக நிர்வாகி ஒருவர் தனது குழந்தையை கனிமொழியிடம் கொடுத்தார்.

பலமுறை கேப்டனுடன் வந்த நான் முதல் முறையாக தனியாக வந்துள்ளேன்; பண்ருட்டியில் கண் கலங்கிய பிரேமலதா

குழந்தையை பெற்றுக் கொண்ட கனிமொழி, “தமிழச்சி” என பெயர் சூட்டி மகிழ்ந்தார். கடும் பணிச்சுமையிலும் கனிமொழி குழந்தைக்கு பெயர் சூட்டியதை நினைத்து திமுக நிர்வாகி மகிழ்ச்சி அடைந்தார். தொடர்ந்து தமிழகத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!