களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை.. ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் வீடுகளில் சோதனை.. அடுத்து சிக்கப்போகுவது யார்?

By vinoth kumar  |  First Published Apr 9, 2024, 8:13 AM IST

டெல்லியில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் ரூ.2,000 கோடி மதிப்பிலான, போதைப் பொருள் பயன்படுத்த தயாரிக்கப்படும் வேதிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.  


போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் வீடு, அலுவலகம், ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

டெல்லியில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் ரூ.2,000 கோடி மதிப்பிலான, போதைப் பொருள் பயன்படுத்த தயாரிக்கப்படும் வேதிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.  இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த அவரை ஜெய்ப்பூரில் வைத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9ம் தேதி கைது செய்தனர். 

Latest Videos

undefined

இதையும் படிங்க: 60வது திருமண நாளுக்காக திருக்கடையூர் சென்று திரும்பிய போது கார் - அரசு பேருந்து மோதல்.. 5 பேர் உயிரிழப்பு!

தொடர்ந்து, சென்னை மியலாப்பூர் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, பல்வேறு ஆவணங்களை் கைப்பற்றினர். மேலும், அவரது வீட்டுக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், வீட்டுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஜாபர் சாதிக் தரப்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து வீட்டில் வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சீல் அகற்றப்பட்டது. பின்னர், ஜாபர் சாதிக் மனைவி மற்றும் குடும்பத்தினர் வீட்டில் வசித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: ஓட்டு போட சொந்த ஊருக்கு போறீங்களா?அப்படினா சென்னையில் இருந்து உங்க ஊருக்கு போகும் பஸ் எங்கு நிற்கும் தெரியுமா?

இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு மற்றும் ஹோட்டல், அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது. அதேபோல், சென்னை பாண்டி பஜாரில் உள்ள இயக்குநர் அமீரின் அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனை முடிவில் போதைப் பொருள் வழக்கில் மேலும் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

click me!