Jallikkattu : அமைச்சர்கள் கண் முன்னே மின்னி மறைந்த பயங்கரம்! ஜல்லிக்கட்டு விஷயத்தில் தடாலடி முட்டுக்கட்டை..

By Ganesh RamachandranFirst Published Jan 10, 2022, 8:02 AM IST
Highlights

தை பிறந்தால் வழி பிறக்குதோ இல்லையோஆனால் சில ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களுக்கு பணம் பிறக்கிறது. காரணம்பல மாவட்டங்களில் மெகா செலவில் ஜல்லிக்கட்டுகளை நடத்தி, செமத்தியாக சம்பாதிக்கிறார்கள்

ஜனவரி மாசம் பொறந்துட்டாலே போதும் தென் தமிழக இளைஞர் பட்டாளம் மாடும், கயிறுமாக கெளம்பிவிடுவார்கள் வாடிவாசல்களை நோக்கி. எல்லாம் ஜல்லிக்கட்டு! வைபவத்திற்காகதான். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என்று ஒரு காலத்தில் சில மாவட்டங்களில் மட்டுமே கொடிகட்டிய ஜல்லிக்கட்டு இன்று கிட்டத்தட்ட தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களுக்கும் பரவி நிற்கிறது.

தை பிறந்தால் வழி பிறக்குதோ இல்லையோ…ஆனால் சில ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களுக்கு பணம் பொறக்கிறது. காரணம்? பல மாவட்டங்களில் மெகா செலவில் ஜல்லிக்கட்டுகளை நடத்தி, செமத்தியாக சம்பாதிக்கிறார்கள். இது போக இதில் நடக்கும் அரசியலோ ஜல்லிக்கட்டு மாடுகளை விடவும் படு மூர்க்கத்தனமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டானது தமிழனின் பாரம்பரியம்! என்பது மாறி, இன்று அது ‘பாலிடிக்ஸ்’ ஆகி நிற்கிறது.

இந்த வருட ஜல்லிக்கட்டுக்கும் ஆளாளுக்கு தயாராகிவிட்டனர். மாடு பிடி வீரர்கள் முட்டையும், கறியுமாக சாப்பிட்டு தங்களின் உடம்பை ஓங்குதாங்காக ரெடி பண்ண துவங்கிவிட்டனர்.

ஆனால் தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலால் கணிசமான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஜல்லிக்கட்டு சாத்தியமா? அவசியமா? இந்த வருடம் அதை நடத்தாமல் விடுவது நல்லது! இல்லையென்றால் மாடுபிடி வீரர்களும் சமூக இடைவெளி பின்பற்ற மாட்டார்கள்! கேலரியில் பார்வையாளர்களும் தள்ளியமர மாட்டார்கள். என்று அரசு உயரதிகாரிகள் முதல்வருக்கு நோட் வைக்க முயன்றார்களாம்.

ஆனால் இதை சீனியர் அமைச்சர்கள் பாய்ந்து தடுத்துவிட்டனராம். ‘ஜல்லிக்கட்டுங்கிறது நம் மாநிலத்தின் பெருமை.  அது மறுக்கப்பட்டப்ப அந்த உரிமையை போராடி வாங்கிய கரங்களில் தி.மு.க.வின் பங்கு பெரிது. என்னவானாலும் ஜல்லிக்கட்டு நடக்கணும். பார்வையாளர்களை வேணும்னா குறைச்சிடலாம்’ என்று முட்டுக்கட்டை போட்டார்களாம்  ஜல்லிக்கட்டுக்கு தடை போடுவதற்கு.

உண்மையிலேயே இந்த அமைச்சர்களுக்கு தமிழ் பாரம்பரியம் மீது அவ்வளவு காதலா? என்று விசாரித்தால் “க்கும், அதெல்லாம் ஒண்ணுமில்ல. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிச்சப்ப தமிழகமெங்கும் நடந்த போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் இந்த அமைச்சர்கள் கண் முன்னாடி வந்து போச்சு. என்னதான் கொரோனாவை சொல்லி ஜல்லிக்கட்டுக்கு இந்தாண்டு தடைபோட்டாலும், தெற்கு மாவட்ட மக்கள் அரசுக்கு எதிரா பொங்கி எழுந்துடுவாங்க. நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இது பெரிய ஆபத்து.

குறிப்பா இளைஞர் வாக்கு வங்கி கிடைக்காமலே போயிடும் சுத்தமா.   அப்புறம்  கழகத்துக்கு தோல்வி உறுதியாகிடும்! அப்படின்னு பயந்தே தடுத்துட்டாங்க.” என்கிறார்கள்.

ஓஹோ!

click me!