Explained: மாதம் ஆயிரம் ரூபாய் யார் யாருக்கு கிடைக்கும்? தகுதி என்ன? ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?

Published : Mar 14, 2023, 01:54 PM IST
Explained: மாதம் ஆயிரம் ரூபாய் யார் யாருக்கு கிடைக்கும்? தகுதி என்ன? ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?

சுருக்கம்

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட வாய்ப்புண்டு என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. 

ஆனால் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த பின் திமுக அரசால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் இதுபற்றி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,  மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக வரும் மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களுக்கு மட்டும் வழங்கலாமா ? என்ற ஆலோசனையில் தமிழக அமைச்சரவை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் சமீபத்தில் நிறைவு செய்த ஏழைகளின் பங்கேற்பு அடையாளம் (PIP) கணக்கெடுப்பில், கிராமப்புறங்களில் பெண்கள் தலைமை தாங்கும் ஏழ்மையான குடும்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..பாஜகவில் இணையும் முன்னாள் முதல்வர்.. அடேங்கப்பா இவரா.? இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.!!

இது திட்டத்தின் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான முதன்மை ஆதாரமாக செயல்படும் என்று பல மாநில அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த (PIP) கணக்கெடுப்பு கிராமப்புற குடும்பங்களை மிகவும் ஏழைகள், ஏழைகள், நடுத்தர வர்க்கம் மற்றும் பணக்காரர்களாக பிரிக்கிறது. அதன் 30 கேள்விகள் கல்வி, வீட்டுவசதி, சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை, நில உரிமை, கால்நடைகளின் விவரங்கள், மின்சார உபகரணங்களின் பயன்பாடு மற்றும் வாகன உரிமை உள்ளிட்ட சமூக-பொருளாதார தகவல்களை மதிப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

இது முதலில் சுயஉதவி குழுக்களுக்கு உதவுவதற்காக பயனாளிகளை அடையாளம் காண நடத்தப்பட்டது. பயனாளிகள் பட்டியல் எத்தனை பேர் ஏழைகள் அல்லது மிகவும் ஏழ்மைகள் என அடையாளம் காணப்படுகிறார்கள். மற்றும் பிற ஓய்வூதியங்களின் மூலம் பயனடைவார்கள் என்பதைப் பொறுத்து இருக்கும். மாநிலத்தில் 1.14 கோடி ரேஷன் கார்டுகள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை வரை 34.27 லட்சம் பேர் ஒன்பது பிரிவுகளின் கீழ் ரூ.1000 ஓய்வூதியம் பெற்றுள்ளனர்.

பெரும்பாலான AAY கார்டுதாரர்கள் ஏற்கனவே முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு கடனையும் கடனுக்கான வட்டியையும் குறைக்க வேண்டும். மாநிலங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5% வரை கடன் வாங்க மத்திய அரசு அனுமதிக்கிறது, ஆனால் மாநிலங்கள் நிலையான 3% நிதிப் பற்றாக்குறையை உறுதி செய்து வருவாய் பற்றாக்குறையை குறைந்தபட்சமாக குறைக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க..ஏடிஎம்மில் இருந்து பணம் மட்டுமா.? இனி பிரியாணியும் கிடைக்கும்.! சென்னையில் சூப்பரான வசதி அறிமுகம்

இதையும் படிங்க..டேட்டிங் ஆப் மூலம் நெருக்கமான காதல் ஜோடி.. கடைசியில் எல்லாத்தையும் முடிச்சுட்டு.!! இப்படியா பண்றது.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!