அரசு பள்ளியில் அதிரடி காட்டிய அமைச்சர் தங்கராஜ்; விழி பிதுங்கி நின்ற ஆசிரியர்கள், அதிகாரிகள்

By Velmurugan s  |  First Published Mar 14, 2023, 12:29 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான திட்டம் முறையாக தயாரிக்கப்படவில்லை என்று அதிகாரிகளை கண்டித்த அமைச்சர் மனோ தங்கராஜ் உடனடியாக திட்டத்தை மாற்றுமாறு உத்தரவிட்டுச் சென்றார்.


கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கல்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.84.25 லட்சம் மதிப்பில் 5 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெறுவதாக இருந்தது. மேலும் அடிக்கல் நாட்டுவதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

அதன் அடிப்படையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பள்ளிக்கு வந்து வகுப்பறைகள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டார். உடனடியாக அதிர்ச்சியடைந்த அமைச்சர் இது யார் போட்ட திட்டம். இப்படி யார் போட சொன்னது. இப்படி திட்டம் போட்டு புதிய கட்டிடம் கட்டினால் பள்ளிக்கு எப்படி பார்வை இருக்கும், மதிப்பு இருக்கும் என்று அதிகாரிகளிடம் அதிரடி காட்டினார்.

Latest Videos

மேலும் இப்படி கட்டிடம் கட்டும் பட்சத்தில் எப்படி மாணவர்களுக்கு காற்றோட்டம் கிடைக்கும், உங்கள் வீடாக இருந்தால் இதுபோன்றதொரு திட்டத்தை செயல்படுத்துவீர்களா என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். அப்போது பள்ளி ஆசிரியர் குறுக்கிடவே, நீங்க பேசாதீங்க. ஆசிரியர்கள பத்தி எனக்கு தெரியும். இது எனக்கும் பொறியாளருக்குமான பிரச்சினை நாங்க பேசிக்குறோம். நீங்க ஓரமா நில்லுங்க என்று கண்டித்தார். 

தஞ்சையில் கோர விபத்து; பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி உள்பட 2 பேர் பலி

மேலும் வகுப்பறைக்கு திட்டம் தயாரித்து கொடுத்த பெண் பொறியாளரிடம் கண்டிப்பாக நடந்து கொண்ட அமைச்சர் உடனடியாக திட்டத்தை மாற்றுங்கள். தற்போது தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்தின் அடிப்படையில் வகுப்பறை கட்டக் கூடாது என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனார். அமைச்சரின் கடுமையான வார்த்தைகளால் கைகளை பிசைந்து கொண்டு நின்ற அதிகாரிகளால் மேற்கொண்டு எதுவும் கேள்வி எழுப்ப முடியாமல் தவித்து நின்றனர்.

கடலூரில் இளைஞர் அடித்து கொலை; உறவினர்கள் சாலை மறியல்

click me!