கன்னியாகுமரி மாவட்டத்தில் தனிமையில் வசித்து வரும் இளம்பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்த காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதியைச் சேர்ந்தவர் கலா (வயது 35). கணவரை இழந்த இவர் தனது 9 வயது மகளுடன் தனிமையில் வசித்து வருகிறார். இவர் மார்த்தாண்டம் பகுதியில் ஒரு மசாஜ் சென்டர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வீட்டில் தனிமையில் இருப்பதால் மகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதிய கலா தனது மகளை காப்பகத்தில் சேர்த்து படிக்க வைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் நடத்தி வரும் மசாஜ் சென்டருக்கு கலா மேல்புறம் வழியாக செல்லும் போது அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் தினசரி கலாவை கேலி செய்வதையும், ஆபாச வார்த்தைகளால் பேசியும் துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் பயந்து போன கலா தனது பாதுகாப்பிறக்காக மிளகாய்ப் பொடியும், கத்தியும் கைவசம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
undefined
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் கலா தனது மசாஜ் சென்டருக்கு போவதற்காக மேல்புறம் பகுதிக்கு வந்தபோது அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு சிலர் மீண்டும் கலாவை பார்த்து கிண்டல் செய்தபடி அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கலா தன் கைவசம் வைத்திருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் மீது எறிந்து தன்னை காப்பாற்ற முயன்றுள்ளார்.
அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு? உறவினர்கள் வாக்குவாதம்
உடனடியாக அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் கலாவை பலவந்தமாக பிடித்து கை கால்களை துணியால் கட்டி மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கலா ஒரு மணி நேரத்திற்கு மேல் மின்கம்பத்திலேயே கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
சாலையில் நடந்து சென்ற முதியவர் கிரேன் மோதி சம்பவ இடத்திலேயே பலி; சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அருமனை காவல் துறையினர் மின்கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த கலாவை மீட்டு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது கலா அவருக்கு நேர்ந்த கொடுமைகளை காவல் துறையினரிடம் தெரிவித்ததை தொடர்ந்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய 3 ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.