கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகள் வார்டில் பாம்பு புகுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகள் வார்டில் பாம்பு புகுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆசாரி பள்ளம் பகுதியில் . 100 ஏக்கர் பரப்பளவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு 150க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனை உள் நோயாளிகள் அறையில் நல்ல பாம்பு ஒன்று புகுந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முதுநிலை நீட் தேர்வு - தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் பேர் எழுதினர்
அந்த பாம்பு உள்நோயாளிகள் வார்டில் இருக்கும் நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அதனை கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளது. இதனிடையே அங்கிருந்த நோயாளியின் உறவினர் ஒருவர் மருத்துவமனையில் பாம்பு இருப்பதை செல்போனில் படம் பிடித்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் பரவும் இருமலுடன் கூடிய காய்ச்சல்.... பிப்.10 அன்று 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு
இதுக்குறித்து அங்கிருந்தவர்கள் கூறுகையில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையை சுற்றிலும் செடிகள் கொடிகள், காடு போல் இருப்பதால் இது போன்ற விஷ ஜந்துக்கள் மருத்துவமனை நோயாளிகள் அறைக்கும், கல்லூரிக்குள்ளும் புகுந்துவிடுகிறது. இது தொடர்பாக பல முறை புகார் அளித்தபோதும் கண்டு கொள்ளவில்லை. இன்று மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவு அறையில் நல்ல பாம்பு புகுந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்குள் நல்ல பாம்பு புகுந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகள் வார்டில் நல்ல பாம்பு; நோயாளியின் உறவினர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பரபரப்பு. pic.twitter.com/l5GhSJSVZ1
— Asianetnews Tamil (@AsianetNewsTM)