சிறுத்தை படம் பாணியில் காவி உடை அணிந்து குறி சொல்வதாக கூறி குமரியில் தொடர் திருட்டு

By Velmurugan s  |  First Published Mar 11, 2023, 4:33 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதிகளில் காவி உடை அணிந்து வீடுகளில் குறி சொல்வது போல் நாடகமாடி மயக்க பொடி தூவி பணம்பரிப்பு மர்ம நபர்கள் தொடர் கொள்ளையில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலமாக நூதன முறையில் பணம் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஆன்லைன் மோசடி, G PAY மோசடி போன்ற சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த நெசவாளர் காலனி பகுதிகளில் காவி உடை அணிந்த நபர் ஒருவர் வீடுகளுக்கு குறி சொல்வது போல் சென்று, தங்கள் வீடுகளில் மாந்திரிகம் செய்த தகடு மற்றும் கெட்ட சக்தி இருப்பதாக கூறிக்கொண்டு சுற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இதில் நெசவாளர் காலனியில் உள்ள முதியவர் ஒருவர் வீட்டில் மாந்திரீக தகடு எடுப்பதற்காக பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறி முதியவரை மாயப் பொடி தூவி மதி மயங்க செய்து வீட்டின் மேஜையில் வைத்திருந்த 14 ஆயிரத்து 500 ரூபாயை திருடி சென்றது தெரியவந்தது, இது குறித்து அவர் அக்கம் பக்கத்தில் தெரிவித்ததை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அருகாமையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர். 

Latest Videos

undefined

தர்மபுரியில் கிணற்றில் விழுந்த குழந்தை பருவம் மாறா குட்டி யானை பத்திரமாக மீட்பு

அப்போது காவி உடை அணிந்த ஆசாமி ஒருவர் சுற்றித் திரிவதும், அவர் வீடுகளுக்குச் சென்றதும் தெரியவந்தது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பாக காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த காவி உடை மர்ம ஆசாமியின் நூதன மோசடியால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே காவல் துறையினர் உடனடியாக அந்த நபரை கைது செய்து மேலும் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர், பெண் தீயில் கருகி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்; காவல்துறை அதிரடி

click me!