சென்னையைச் சேர்ந்த பாய் வீட்டு கல்யாணம் என்ற பிவிகே பிரியாணி என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் கொளத்தூரில் ஆளில்லா பிரியாணி விற்பனை நிலையத்தை நிறுவியுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் இப்போது இந்தியாவின் முதல் பிரியாணி விற்பனை இயந்திரம் உள்ளது. அதாவது விற்பனை இயந்திரம் என்றால் வேறு ஏதாவது மிஷினா என்று பயப்பட தேவையில்லை.
ஏடிஎம் இயந்திரம் மாடல் தான் இது. பொதுவாக ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரும். இங்குள்ள இயந்திரத்தில் இருந்து பிரியாணி வரும். இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் புதிய பிரியாணியை ஆர்டர் செய்து எடுத்துச் செல்ல உதவுகிறது. இந்த தானியங்கி இயந்திரத்தை சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான பாய் வீட்டு கல்யாணம் என்ற பிவிகே பிரியாணி அறிமுகப்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..டேட்டிங் ஆப் மூலம் நெருக்கமான காதல் ஜோடி.. கடைசியில் எல்லாத்தையும் முடிச்சுட்டு.!! இப்படியா பண்றது.!
இந்த வசதி தற்போது கொளத்தூரில் உள்ளது.இந்த கண்டுபிடிப்பு பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரியாணியின் மோகமும் தேவையும் கடந்த ஆண்டு இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உணவு டெலிவரி பயன்பாடுகளில் இந்தியர்களிடையே இது ஒரு முக்கிய அம்சமாக இருந்தது.
2020 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 137 பிரியாணி ஆர்டர்களை தங்கள் செயலி பெற்றதாக Swiggy கூறியுள்ளது. மறுபுறம், Zomato, தங்கள் செயலி நிமிடத்திற்கு 186 பிரியாணி ஆர்டர்களைப் பெற்றதாகக் கூறியது. இந்த நிலையில் பாய் வீட்டு கல்யாண நிறுவனத்தின் பிரியாணி இந்த ஏடிஎம் பிரியாணி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க..பாஜகவில் இணையும் முன்னாள் முதல்வர்.. அடேங்கப்பா இவரா.? இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.!!