மோடியால் தூக்கத்தை தொலைத்தவர்கள் யார் யார் தெரியுமா? பட்டியல் போட்டு விளாசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

By SG Balan  |  First Published Mar 30, 2024, 8:16 PM IST

தேர்தல் பத்திர ஊழலால் பிரதமர் மோடி தூக்கத்தை தொலைத்து நிற்கிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கம் பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம், கிருஷ்ணகிரி தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது 10 ஆண்டு பாஜக ஆட்சியில் தூக்கத்தைத் தொலைத்திருப்பது சாமானிய மக்கள்தான் என்று விமர்சித்தார்.

பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

Latest Videos

"நமது திராவிட மாடல் அரசின் குரல், தெற்கில் மட்டுமல்ல வடக்கிலும் ஒலிக்கிறது, வடக்கிற்காகவும் ஒலிக்கிறது. ஒரு மாநில அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு திராவிட மாடல் அரசுதான் சிறந்த எடுத்துக்காட்டு. ஒன்றிய அரசு எப்படி செயல்படக்கூடாது என்பதற்கு பாஜக அரசுதான் எடுத்துக்காட்டு!

பிரதமர் மோடிக்கு ஒன்றிய அரசின் உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. அதில், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்புவரை தென் மாநிலங்களில் பாஜக வெற்றி பெற முடியாது என்ற நிலைமை இருந்தது. ஆனால் தேர்தல் பத்திர ஊழல் வெளிவந்த பிறகு, வட மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறாது என்று தெரிந்துவிட்டது. இது தான் உண்மை நிலை. தேர்தல் பத்திர ஊழலால் மோடி தூக்கத்தை தொலைத்து நிற்கிறார்.

10 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஐ.எஸ். பயங்கரவாதிகள்! ஓநாய் குழுவுக்குப் போட்ட உத்தரவு!

: சேலம் - கிருஷ்ணகிரி பரப்புரைப் பொதுக்கூட்டம்https://t.co/Kddp47TAnu

— M.K.Stalin (@mkstalin)

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயத்தில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனையும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அமலாக்கத்துறையைஐ வைத்து கைது செய்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு கூட்டணி கட்சிகள் போல, அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை பிரதமர் மோடி பயன்படுத்துகிறார் என்றால் உச்சக்கட்ட தோல்வி பயத்தில் மோடி இருக்கிறார் என்றே தெரிகிறது.

ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வெறியில் இந்திய ஜனநாயகத்தை சீரழிக்கிறார் பிரதமர் மோடி. பாஜகவின் சர்வாதிகாரபோக்கு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அதனால்தான் நிதியமைச்சர் உட்பட பாஜக முன்னணி நிர்வாகிகள் தேர்தலை சந்திக்க அஞ்சுகின்றனர்.

தி.மு.க இருக்கும் வரை உங்க மோடி மஸ்தான் வித்தை எல்லாம் பலிக்கவே பலிக்காது! தமிழ்நாடு எப்பவுமே புண்ணிய பூமி தான், புண்ணிய பூமியாகதான் இருக்கும். நாட்டை மத அடிப்படையில் துண்டாட நினைக்கும் பா.ஜ.க பாவிகளின் மண்ணாக மாறவே மாறாது"

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

இப்பவே வாட்டி வதைக்கும் வெயில்... ஆறுதல் அளிக்க வரும் லேசான மழை!

 
click me!