பள்ளி கலவரத்துக்குக் காரணமானவர்கள் பட்டியலினத்தவர்களா..?உளவுத்துறை எவ்வாறு முடிவுக்கு வந்தது? அண்ணாமலை ஆவேசம்

By Ajmal KhanFirst Published Jul 26, 2022, 12:56 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு பின்னணியில் ஆதி திராவிடர்கள் இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், உளவுத்துறையின் இந்த முடிவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி பள்ளியில் வன்முறை

கள்ளக்குறிச்சி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஶ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிர் இழந்தார். மாணவி மரணம் தொடர்பாக நீதி வேண்டி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இதனையடுத்து கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது தனியார் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது. பள்ளியில் இருந்த 40க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.  வகுப்பறைகள்,மாணவர்களின் டிசிக்களை தீயில் கொளுத்தப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வன்முறையில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் வன்முறை சம்பவத்தின் போது பள்ளியில் இருந்து திருடப்பட்ட பொருட்களை திரும்ப ஒப்படைக்குமாறு தண்டோரா மூலம் போலீசார் எச்சரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து பள்ளியில் இருந்து எடுத்த சென்ற பொருட்களை கிராம மக்கள் சாலையில் வீசிச்சென்றனர்.

திருவள்ளூர் மாணவி உடற்கூராய்வு வீடியோ பதிவுடன் தொடங்கியது...! சரளா மரணத்திற்கு காரணம் என்ன..?

வன்முறை பின்னனியில் யார்..?

இந்தநிலையில் கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த நிலையில், வன்முறை சம்பவத்தின் பின்னணியில் ஆதி திராவிடர்கள் இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாக ஆங்கில நாளேடு ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது எழுத்தளவில் மட்டுமே உள்ளது என்பது மீண்டும் ஒரு முறை மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தைக் கள்ள மௌனத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களது இயலாமையை ஒரு சமுதாயத்தினரின் தலையில் இறக்கி வைத்துள்ளனர் என கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி வன்முறை.. போலி தகவலை பரப்பியவருக்கு ஆப்பு.. போலீஸ் எடுத்த அதிரடி முடிவு..!

'பட்டியலின மக்களை வஞ்சிக்கும் திமுக'

தி ஹிந்து நாளிதழில் வெளிவந்த செய்தி தமிழக காவல்துறையினரின் செயல்பாட்டையும் உளவுத்துறையின் இயலாமையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கலவரத்துக்குக் காரணமான அனைவரும் பட்டியலினத்தைச் சார்ந்தோர் என்ற முடிவுக்கு உளவுத்துறை எவ்வாறு வந்தது? இதில் சில கட்சிகள் சமூக நீதியை பின்னுக்குத் தள்ளி, அரசுக்கு அளித்த ரகசியத் தகவலை ஊடகத்திற்குக் கசிய விட்டதை முதன்மை குற்றச்சாட்டாக வைத்துள்ளனர். தமிழக உளவுத்துறையின் செயல்பாடு அனைவரும் அறிந்ததே! மேடையில் முற்போக்குத்தனமாகப் பேசுவதும் நிஜ வாழ்வில் பிற்போக்குத்தனமாக இருப்பதும் திமுக அரசுக்கு ஒன்றும் புதிதல்ல. திமுக ஆட்சியில் கலவரங்களும் புதிதல்ல இப்படி கலவரங்கள் முடிந்த பின் அதற்குப் பட்டியலின மக்களை வஞ்சிப்பதும் புதிதல்ல. மீண்டும் ஒரு முறை ஒரு திறனற்ற அரசின் எடுத்துக்காட்டாக திமுக அரசு விளங்கியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. உளவுத்துறையில் சாதிய வாதிகள்.. விசிகவுக்கு எதிரான சதி.. அலறும் திருமா.!

 

 

click me!