"வேர் தி ஹார்ட் இஸ்"- சீசன் 2 விற்காக தன் வீடு முழுக்க சுற்றி காண்பிக்கும் "அனிருத்"...உலகறிய செய்த "அந்த பொக்கிஷம்" இதோ....!

Apr 12, 2018, 5:49 PM IST



"வேர் தி ஹார்ட் இஸ்"- சீசன் 2 விற்காக தன் வீடு முழுக்க சுற்றி காண்பிக்கும் அனிருத்.... உலகறிய செய்த "அந்த பொக்கிஷம்" இதோ....!

தன் வெற்றியின் ரகசியத்தை உலகறிய மனம் திறந்துள்ளார் அனிருத்..."வேர் தி ஹார்ட் இஸ்"-சீசன் 2 விற்காக அனிருத் ரவிசந்தர் உங்களை அவர் வீட்டிற்கே அழைக்கிறார்...

 

இசையமைப்பாளர் அனிருத்தின் வெற்றி ரகசியமான அவர் வீட்டின் பொக்கிஷங்களை நம் கண் முன்னே அவரே நம்மிடம் பகிர்ந்துக்கொள்கிறார்...வாருங்கள் நாமும் அவருடன்  பயணிப்போம்....ஒவ்வொரு அழகிய வீட்டிற்கு பின் ஒரு ரகசிய கதை இருக்கும் அல்லவா..?

நாம் குடி இருக்கும் இடம் தான் நமக்கு "கோவில்" என்பார்கள்...அத்தகைய அழகான வீடு எப்படி எல்லாம் இருக்கும்..?

ஒரு ஒளியாய், ஒரு ஒலியாய், பல வண்ணங்களாய், காற்றில் கலந்த ஒரு இதமாய், மதியம் நேர சூரிய வெயிலோடு, மாலை நேர மனதிற்கு இதமான சூழல் இவை அனைத்தும் ஒரே இடத்தில் அதுவும் நம் வீட்டில் கிடைக்க இருக்கவே இருக்கு "ஏசியன் பெயின்ட்ஸ்"

'வேர் தி ஹார்ட் இஸ்"- சீசன் 2  

'வேர் தி ஹார்ட் இஸ்"- சீசன் 2  விற்காக, தன் வீட்டின் பொக்கிஷமான ஏசியன் பெயின்ட்ஸ்" இன் அனைத்து அற்புதங்களையும் வீடு முழுக்க சுற்றி காண்பிக்கிறார் "ஒய் திஸ் கொலவெறி 'ஸ்டார் அனிருத்"

ஏசியன் பெயின்ட்ஸ் வழங்கும் வேர் தி ஹார்ட் இஸ் மூலமாக நேயர்கள் அனைவருக்கும், உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பிரபலங்கள் தங்கள் வீட்டில் எப்படி  எல்லாம் ஏசியன் பெயின்ட்ஸ் அற்புதங்களை வர்ணிக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்..

பயன்படுத்தும் சோபா, முதல் வண்ணமயமான வீட்டின் சுவர், ஓடி விளையாடி நாற்காலியில் அமரும் குழந்தை பருவ நினைவுகள் அனைத்தும் கண் முன்னே வந்து செல்லும் அல்லவா...? இதை பற்றி மனம் திறக்கிறார் இளம் இசை அமைப்பாளர் அனிருத்.

ஒய் திஸ் கொலவெறி 'ஸ்டார் "அனிருத்"

தென்னிந்தியாவின் மிக முக்கிய  இசையமைப்பாளர் அனிருத்...ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் உலக அளவில் புகழின் உச்சிக்கு சென்றவர்.

மாடர்ன் கலந்த தன் அழகிய வீட்டை கலாச்சார நயத்தோட வண்ணம் தீட்டி அழகை  ரசிக்கும் அனிருத், தன் வீட்டில் அதிகம் நேரம் செலவிடும் அவரது அறை, அவரது  அறையில் வைக்கப்பட்டு உள்ள படங்கள், குழந்தை பருவம் முதல் இன்று வரை தான்  கடந்து வந்த பாதையை விளக்கும் சில அற்புத படங்கள், தான் விரும்பும் சினி துறை  ஜாம்பவான் ரஜினிகாந்த் முதல் இசை அமைபாளர் ஏஆர் ரஹ்மான் வரை அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் என அவருக்கு பிடித்த அனைத்தும் அவர் வீட்டில் வசீகரிக்கின்றன

மர ஊஞ்சல் ("தி ஹாட்சீட்")

நண்பர்கள் வந்தால் போதும் அதிக நேரம் அவர்களுடன் அமர்ந்து பேசி பழக, ஜாலியான அந்த தருணத்தை செலவிடும் இடமாக இருப்பது "தி ஹாட் சீட்".. அதாங்க மர ஊஞ்சல். அனிருத் பற்றியும் அவர் வீட்டின் அழகிய அமைப்பை பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...

இசைஞர் அனிருத்துடன் இணைந்து, அவர் வீட்டின் பொக்கிஷத்தை கண்டு களிப்பது மட்டுமல்லாமல் நாமும், ஏசியன் பெயின்ட்ஸின்  அற்புதங்களை உணர்ந்து, நம் வீட்டையும் வெற்றியின் பொக்கிஷமாக மாற்றலாம் வாங்க..